பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 க பி ல ர் வீரக்கழல்; அவ்விளைஞன் இத்தகைய வனப்புடையான்; அவனத் தொடர்ந்து சில நாய்கள் வந்தன ; பகைவரைப் பாழாக்கும் வீரரைப்போல் வெகுண்டு நோக்கும் பார்வை; மூங்கில் முளை போன்ற பற்கள் ; வளைந்து வலிய உகிர் ; இமையாக் கண் ஆகிய இவற்ருல், அவை கண்டார்க்கு அச்சம் விளைக்கும் தோற்றத்தன. இளைஞனைத் தொடர்ந்து வந்த அந் நாய்கள், அவனி டத்தே அடங்கி கில்லாது அம் மகளிரை அணுகத் தொடங் கின; அந் நாய்களின் தோற்றமும், மேலே வீழ்ந்து பாய்வதே போன்ற அவற்றின் வருகையும் அம் மகளிரை அஞ்சி நடுங்கச் செய்தன ; நடுங்கிய அவர்கள் அடிதளர நடந்து அவ்விடத்தை விட்டு நீங்கி வேறிடம் செல்ல விரைந் தனர்; அப்போது, ஆவைக்காணும் ஆனேறு அகமகிழ்ந்து அணுகுவதே போல், அவ்விளஞன் அம் மகளிரை அணு கித் தன்னைத் தொடர்ந்து வந்த நாய்களைக் கண்டு அஞ்சியே அவர்கள் அப்பால் செல்வது கண்டு வருந்தினன். மெல்லிய இனிய சொற்களால், அம் மகளிரின் அழகிய தலைமயிர், அவர்தம் இளமை, தொடியணிந்த அவர் முன்கை, மெல்லிய சாயல், மருண்டு மதர்த்த அவர் கருங் கண் ஆகியவற்றைப் பாராட்டினன். பாராட்டி, என் வாளிற்குப் பிழைத்து வந்தது ஒரு மான் ; என்வேல் பட்டுப் பிழைத்து வந்தது ஒரு வேழம்; அவற்றுள் யாதேனும் ஒன்று இங்கு வாக் கண்டிரோ கண்டிராயின், எங்கே உளது? எவ்வழிச் சென்றது ? என்பதைச் சற்றே. அருள் கூர்ந்து அறிவியுங்கள், ’ என வேண்டி கின்ருன். கெடுதி பல கூறி அவன் வினவவும், அவர்கள் அவனுக்கு யாதும் பதில் கூறினால்லர். வர்கள் மெளனம், அவனுக்கு மனக்கலக்கத்தை அளித்தது. மெல்லியலிர் கெட்டுப்போன அவற்றைக் காட்டித்தா உங்கள் மனம் இடந்தாவில்லை போலும் ? அவற்றைக் காட்டித் தாராது போயினும் போக; என்னேடு ஒருசொல், ஒருமுறை பேசினல் உங்களுக்குப் பழியா வந்து சேர்ந்து விடும் அவற்றைக் கண்டோம்: