பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிப் பாட்டு 85 இல்லை என்று ஒரு வார்த்தை கூறுங்கள்,' என்று வேண்டி நின்முன் வேண்டி கின்ற அவன், தன்னையும் அம் மகளிரையும் சூழ்ந்துகொண்டு கனத்தும், குலத்தும் குழப்பம் விளேத்துக்கொண்டிருக்கும் நாய்களைக் கண்டான்; அவற்றைக் கண்டஞ்சிய அவர்கள், அவற்றின் குரல் கேட்டு மேலும் அஞ்சுகின்றனர் என்பதையும் அறிந்தான். அவர்கள் விடை கூருமைக்கு அவ்வச்சம் காணமாக இருக்குமோ என எண்ணினன்; உடனே, பூவும் இலையும் தழைத்து அண்மையில் இருந்த ஒரு மரத்தினின்றும் ஒரு கொம்பை ஒடித்தான்; நாய்களே ஒட்டினன் ; கண்டாரை அஞ்சுவிக்கும் தோற்றமும், கேட்டாரை நடுங்கப்பண்னும் குரலும் உடைய அந் நாய்கள், அவ்விடத்தினின்றும் அகன்று விடவே, இனி அம் மகளிர் தனக்கு விடைகூறுவர் என்ற வேட்கை மீதுார இளைஞன் கின்றிருந்தான். அவர் களும் ஒருவேளை அவனுக்கு விடை கூறியும் இருப்பர்; ஆல்ை, அதற்கு இடையூருக ஒன்று வந்தது. அவர்களுக்கு அண்மையில் ஒரு தினப்புனம்; அதைக் காத்துவருவோன் ஒரு ஆடவன்; ஆற்றல் மிக்கோன்; அன்று காவல் கருதி வருங்கால், அவன் மனேவி அளித் தாள் என்றதால் மதுவை அளவிற்குமீறிக் குடித்து விட் டான். அதனல், காவல் தொழிலைவிட்டுச் சிறிது கண்ண யர்ந்து விட்டான்; அவன் சோர்வினைக் கண்டுகொண்ட ஒருகளிறு கொல்லேயில் புகுந்து, கதிர்களே வேண்டும் மட்டும் கின்றும் மிதித்தும் அழித்துவிட்டது; அங்கிலே யில் அவன் மயக்கம் தெளிந்தது; புனத்தைக் கண்டான்; அதன் பாழ்பட்ட நிலையைப் பார்த்தான்; அருமையாகக் காத்து வளர்த்த தினப்புனம் அழிந்ததுகாண, ஆத்திரம் பொங்கிற்று; வில்லை வளைத்தான்; கொடிய அம்பைப்பூட்டி அக் களிற்றின்மீது விட்டான்; அதற்கு அச்சம் ஊட்டத் தட்டையை எடுத்துத் தட்டின்ை; பக்கத்துப் புனத்தில் இருப்பாரும் ஒன்று கூடினர் , ஒ என்ற ஒலியையும், உதடு மடித்து உண்டாக்கும் சீழ்க்கையையும் எழுப்பி, அக் களிற்றை விசட்டினர்; உணவை உண்ணவொட்டாது