பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 க பி லர் தடுத்துவிட்டதோடு, உடலிற்கும். ஊறு விளத்தனரே என்று களிற்றிற்குக் கடுங்கோபம் உண்டாயிற்று; இடி போல் பிளிறி எதிரில்படும் எதையும் அழித்து அக் காடே அலறுமாறு ஒடி வந்தது; ஒடி வந்த யானே, மகளிரும் இளைஞனும் சிற்பதைக்கண்டு தன் சினம் முற்றும் அவர் கள்மீது செல்ல, அவர்கள் இருக்கும் இடம் நோக்கி விரை யத் தொடங்கிற்று. - எதையோ எண்ணி இன்பக் கனவு கண்டிருக்கும் அம் மகளிர், எதிர்பாரா நிலையில் யானே ஒன்று தம்மீது பாய்வது காணவே, செய்வதறியாது திகைத்தனர்; உயிர் மீதுள்ள அவர் காதல், உயிரினும் சிறந்த நாணே மறக்கச் செய்தது. எதிரே உள்ள இளைஞன் அங்கியன் என்பதை மறந்தனர்; அவன் ஒருவனே அங்கிலையில் தம்மைக் காக் கும் திறலுடையான் என்று எண்ணினர்; இருந்த இடத்தை விட்டு விரைந்து ஒடினர்; அவனே நெருங்கி அணைந்தாற்போல் நின்றனர்; அப்போது அவரைப்பற்றிய அச்சம் அகலாமல் அவரை வருத்துவது கண்டான்; வில்லை வளத்தான்; அம்பைப் பூட்டினன்; களிற்றினை நோக்கி நானேக் காதுவரை இழுத்துக் கடுமையூட்டிவிட்டான். ஏவிய அம்பு சிறிதும் குறி தவமுது களிற்றின் முகத்தில் ஆழப் பதிந்தது; இரத்தம் பீறிட்டு வெளிப்பட்டுப் பாய்க் தது; களிறும் பின் வாங்கி ஓடிவிட்டது. - யானே மறைந்த பின்னரும் அம் மகளிரைப் பற்றிய அச்சம் மறைந்திலது, அச்சத்தால் ஒருவரையொருவர் அணைத்து கின்ற கைப்பிடியினைத் தளர்த்தாமல் இறுகப் பிணைத்து கின்றனர்; இடிகரைக்கண் நின்ற வாழை, ஆற்றில் பெருவெள்ளம் வந்தபோது, அவ்வாற்றுநீர் அலை யால் மோதுண்டு அலமருதல்போல் நடுங்கி சிற்பாாாயினர்; அவர்கள் அனைவரும் அஞ்சினர். ஆகவே, அவருள் ஒரு வரை யொருவர் தேற்றி ஆறுதல் பெறுவர் என்று எதிர் பார்த்தல் இயலாது என்பது கண்டான் இளைஞன்; அவரை அணுகினன்; 'அச்சம் தவிர்; அஞ்சுதல் ஒழிக,” எனக் கூறிக்கொண்டே, அவருள் தலைமையுடையாள் கைப்