பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிப் பாட்டு 87 பிடித்து, அவள் நெற்றியைத் தடவிக் கொடுத்து, இவ்வாறு ஏன் அஞ்சுகின்றன? நீ அஞ்ச நான் இவ்விடம் விட்டு வேறெங்கும் செல்லேன்; அன்றியும் கின்னேடு கலந்து மகிழ்ந்து வாழவும் விரும்புகிறேன், என்று கூறிக் கொண்டே, அவள் அருகே, அவளே விடாது நிற்கும் அவள் ஆருயிர்த் தோழியின் முகத்தை, "என் செயலுக்கு ஒப்புதலும் உறுதுணையும் அளிப்பாயாக’ என வேண்டு வான்போல் நோக்கி நகைத்து கின்ருன். இளைஞனுக்கும் மகளிர்க்கும் ஏற்பட்ட உறவு காலக் கணக்குப்படி சிறிதே எனினும், அவன் செய்த நன்றியை கோக்க, அது பெரிது; அதனுல் அவன் அவர்களோடு பலநாள் பழகிய நண்பன்போல் ஆயினன். தனக்கும் தன் நண்பர்களுக்கும் தொடர்புடைய ஒரு செயலே அவரையும் கலந்து செய்யவேண்டும் என்று கருதாது கேளாது செய்வதே நட்பிற்கு அழகு ; அவர் அவ்வாறு செய்தால் அதற்காக அவரோடு மாறுபடாது, அவர் செயலுக்கு உடன்பட்டு இனியராதலே சான்ருேர்க்கு அழகு; நண்பர் கள் தம் உரிமையால் செய்த செயல் தமக்கு உடன்பாடு இல்லையாயினும், அவர் நட்புக் கருதி உடன்படுதல் வேண் டும்; இல்லையேல் அந் நட்பு சிறந்த நட்பு எனப்படாது ; 'பழைமை எனப்படுவது யாது எனின் பாதும், கிழமை யைக் கீழ்ந்திடா நட்பு; நட்பிற்கு உறுப்பு கெழு தகைமை , மற்றதற்கு உப்பாதல் சான்ருேர் கடன்:” 'பழகிய கட்பு எவன் செய்யும், கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை. இப் பண்பாட்ட்ை அறிந்தவள் கோழி , ஆகவே, இளைஞன் செயல் கண்டு ஏதும் கூருது கின்ருள். ஆருயிர்த்தோழி, தன் செயல் அடாது எனக் கொண்டாளா யின் அடங்கியிாாள்; அவள் அடங்கி யுள்ளாள் ; ஆகவே, அவள் தன் செயலை ஏற்றுக்கொண்டாள் எனக் கொண் டான் இளைஞன் விழைதகையான் வேண்டியிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின்,” என்பதை அவனும் உணர்ந்தவன். ஆகவே, அவன் உள்ளத்திலிருந்த சிறிது அச்சமும் அகன்றது. -