பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிப் பாட்டு 89 கலந்து உண்டான தேறலைத் தலைவனுகவும், அத்தேறலோடு கலந்த கலேவனே அங்குக் கொண்டுவந்த ஊழாகவும், அத் தேறலைத் தேறல் என அறியாது, நீர் என்று கருதி உண்ட மயில், உயர்குலத் தலைவனகிய அவன், தனக்கு ஒப்பாகான் என அறியாது அவன்பால் அன்புகொண்டு கலந்ததாகவும், கள்ளுண்டு மயில் களித்தத்தைக் கள வொழுக்கம் மேற்கொண்டு தான் பெற்ற இன்பமாகவும், மயில் நடை தளர்தல், இனிச் செய்வன அறியாது தான் திகைப்பதாகவும், உயர்ந்த மலையிடத்தில் மலர்ந்த காக்கள் அழிவுற்று, கீழே சிதறிக் களத்தை அழகு செய்வது, உயர்குலத்தில் பிறந்த அவ்விளைஞன், தன் உயர்குலச் செருக்கினே ஒழித்துவிட்டுத் தன்னே அடைந்து தனக்குச் சிறப்புச் செய்வதாகவும் கற்பனை கொண்டாள். - அக் கற்பனே உலகில் உலாவிச் செயலற்றுத் தளர்ந்து கிற்கும் அவளைத் தழுவிய இளைஞன், அவள் தன் தழுவலை விரும்புகிருள் என்ரினும், தன் அணைப்பினின்றும் வெளியேற விரும்பும் அவள் உள்ளத்தையும், அதற்குக் காரணம், அவள் தன்னேடு கலந்து வாழ விரும்புகிருள் எனினும், அவ்வுறவு களவொழுக்கமாக இருப்பதை வெறுக்கிருள்; கற்ப்ொழுக்கமாக இருக்க விரும்புகிருள் என்பதையும் உணர்ந்தான். தான் யார் என்பதையும், தன் உள்ளம் கொண்ட உறுதி யாது என்பதையும் உணர்த்தி ஆறுதல் கூற வேண்டும் என்று எண்ணினுன், ! எங்கள் ஊர், வளம்பல பெருகிய பேரூர்; எங்களுரை யடுத்து வாழவரும் அனே வரையும் அன்புடன் ஏற்அப் போற்ற எப்பொழுதும் தயார் எங்கள் ஊரார்; அவ்வூரில் வாழும் காங்களும் செல்வத்தில் செல்வத்துப் பயனே ஈதல்’ என்பதையும் அறிந்து, வந்தோர்க்கு வரையாது வழங்கும் வளமான உள்ளம். படைத்தவர்கள்; இவ்வளவு பெற்றும், வாழ்வு கிறைந்தது என்ற எண்ணம் எங்களுக்கு உண்டாகவில்லை; இதுவே வாழ்வின் பயன் எனக் கொள்ளும் ஏழை உள்ளம் உடைய