பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 க பி ல ர் வரல்லர் நாங்கள் ; நெய் ஒழுக ஒழுக நீ ஆக்கிய அறுசுவை உணவினைச் சுற்றம் பல சூழ விருந்தினராய் வந்த உயர்ந் தோர் பலர்க்கும் இட்டு, அவர் உண்டு எஞ்சியவற்றை கின்னெடு இருந்து உண்னும் வாழ்வே வாழ்வாம்; அவ்வில் வாழ்வே நல்வாழ்வு என நானும் கருதுகின்றேன்; இக் கொள்கையினின்றும் சிறிதும் வழுவேன்; இஃது உண்மை. அதோ தோன்றும் மலைமீது உறையும் குறிஞ்சி நிலக் குரவனும் முருகன் அறிய ஆணையிட்டுக் கூறுகிறேன் ; நின்னைப் பிரியேன் ; பிரியின் உயிர்தரியேன்,” என்று கூறிச் சூளுரைத்து அவ் விளைஞன் கின்ருன்; அவன் சூளுற வால் அவன் உள்ள உறுதி உணர்ந்து மகிழ்ந்த மகளிர், அவன் கூட்டுறவைப் பெற்றுத் தந்த அக் களிற்றினே வாழ்த்தி, அவனெடு உள்ளம் கலந்து உறவாடி அச்சோலை யில் அமர்ந்திருந்தனர். மாலை வர்துற்றதையும் மகளிர் மறந்தனர்; பகலோன் மலையைச் சார்ந்து மறைந்தான் ; ஒடி விளையாடிய மான் கூட்டம்'மரத்தடிகளைச் சார்ந்து ஒய்வு கொள்ளத் தொடங் கின் ; காலையில் காடு நோக்கி வந்த பசுக்கள், தம் கன்று களே கினைந்து அம்மா ! ? என அழைத்துக்கொண்டே வீடு நோக்கித் திரும்புவவாயின ; பிரிந்துறை வாழ்வில் பழகி யறியா அன்றிற் பறவைகள் பனேயின் மடலிலே அமர்ந்து தம் அருந்துணேப் பேடுகளே அழைக்கலாயின; இராக் காலத்தில் இரைதேடத் தொடங்கும் பாம்புகள், உண வுள்ள இடத்தை உணர்த்தும் ஒளியினைப்பெற, தம் உடலுறை மாணிக்கங்களே உமிழத் தொடங்கிவிட்டன : அடர்ந்த காடெங்கும் சென்று மேய்ந்து கொண்டிருக்கும் ஆனினங்களே ஒருங்குசேர்த்து ஊர்க்குள் புகுவதற்காக ஆயர்கள் குழலை வாயில் வைத்து ஆம்பல் என்ற இனிய பண் பாடத் தொடங்கிவிட்டனர்; ஆம்பல்கள் மலரத் தொடங்கி விட்டன; புனத்தை அடுத்துள்ள ஊர்களில் அவரவர்கள் அங்கிக் கடற்ைறலாயினர்; மனேகள் தோறும் மகளிர் ஏற்றிய மணிவிளக்குகள் ஒளிவிடத் தொடங்கிவிட்டன; அவ்வொளியைத் தொடர்ந்து, புனத்துப் பயிரைக் காட்டு