பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கபிலர் வேருேர்நாள், ஊர்க்காவலர் கண்ணிற்கும் அகப்படா மல், நாய்களின் தொல்லையையும் கடந்து வந்து கெடிது நேரம் காத்திருந்தான்; தாயும் உறங்கிவிட்டாள்; ஆனல், அந் நிலையில் நிலவு வெளிப் போந்து பேரொளி பாப்பிக் காயத்தொடங்கியது கண்டு, களவொழுக்கத்திற்குத் தகுதி உடையதன்று அக் காலம் எனக் கருதி ஊர் திரும்பி விட்டான். ஒருநாள் எவ்விதத் தடையும் இன்றி வந்து விட்டான் ; வந்து அம் மகளிர்க்குத் தன் வருகையை அறிவிக்கும் குறியாக, அவ் வீட்டருகே உள்ள மரத்தின் மீது சிறுகல் வீசி அம் மரத்தில் வாழும் பறவைகளைக் குரல் கொடுத்து எழுந்து அமாச் செய்தான்; ஆல்ை, அதற்கு முன்னரே, யாது காரணத்தாலோ, அப் பறவைகள் குரல் எழுப்ப, அதை அவன் வருகை அறிவிக்கும் குறியாகக் கொண்டு, தலைமகளும் தோழியும் அகமகிழ்ந்து எழுந்து அங்கே வந்து அவனேக் காணுது கலங்கி வறிதே மீண்டனர்; ஆகவே, இம் முறை அவன் உண்மையில் வந்து குறி செய்தானகவும், அம் மகளிர் அதையும் முன்போன்ற நிகழ்ச்சியாகவே கொண்டு வாாது நின்றுவிட்டனர். இதல்ை, அன்றும் அவர்களைக் காணுதே மீண்டான். இவ்வாறு தன் இன்பவாழ்விற்கு இடையூறு பல நிகழக் கண்டும், அவன் அன்பிற் குறைந்தா னல்லன்; அம் மகளிரை முதற்கண் கண்ட காலத்தில் அவர்கள்பால் எவ் வளவு நிறையன்பு கொண்டானே, அதில் சிறிதும் குறைந் தானல்லன்; துறவுள்ளம் கொள்ளும் அளவு முதுமை யுடையானுமல்லன் ; இளமை உணர்ச்சிகளில் ஒன்றும் குறையாதவன்; செல்வமற்ற வறியனல்லன்; எண்ணிய எண்ணியாங்கு எய்துதற்கு ஏற்ற துணையாம் நிறை செல்வ முடையான் ; என்ருலும், அச் செல்வச் செருக்கால் அறனல்ல செய்யும் அழிவுள்ள முடையானல்லன் ; ஆகவே, 1றிதே வந்து வந்து மீள்வதிலும், வரைந்து கொள்வதே லமாம் என்று கொண்டான். தலைமகள், இளைஞன் வரும் வழியையும். அவன் வரும் ாலத்தையும், வந்து வறிதே மீள்வதையும் எண்ணுகிருள்