பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கபிலர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிப் பாட்டு 93. இடியேறுண்ட நாகம்போல், வலையில் அகப்பட்ட மயிலே போல் மனத்துயர் மிக்கு மாழ்குகிருள்; அவன் வரும் வழி, ஏதமில்லாப் பெருவழியன்று; யாளியும், புலியும், கருமயிர்க், காடியும், காட்டெருதும், கொல்களிறும், கொடும்பாம்பும் வாழும் பாழ் கிலம்; காலேக் கவ்வியிழுக்கும் முதலையும் பிறவும் வாழும் நச்சு நீர்நிலைகள் ; அருள் என்பதறியா ஆறலை கள்வர்வாழ் அன்பில் கொடு நிலம்; காலை அடிதடு. மாறச் செய்யும் வழுக்கு நிலம்; துன்பம் செய்வதே தொழிலாகக் கொண்ட பேயும் பிசாசும் உலாவும் கொடு நிலம்; இவை அவன் கடந்து வரவேண்டிய வழி இவ் வழியில், இாவில் வருவதை எண்ணுங்தோறும், அவள் உள்ளம் துணுக்குறும்; கண்களில் நீர் பெருகக் கலங்கி நிற்பாள். அவள் உள்ளத்துயர் அவள் உடலழகைக் கெடுத்தது; உடல் நலம் குன்றிற்று; தோள் மெலிந்தது; வளை கழன் றது; இவ்வாறு இளைஞன் வரும் வழிஅருமையை எண்ணி யும், அவனேப் பெற மாட்டாமையைக் கண்டும் தலைமகள் வருந்துகிருள் எனினும், அவள் துயர்க் காரணம் இது எனப் பிறர் அறியக் கூறுதல் பெண்டிர்க்கு அழகன்று; ஆகவே, அவள் உயிர்த்தோழி அவள் துயர்க் காரணத் தைத் தாய் தந்தையர் அறியக் கூருளாயினுள். தாய் தன் மகள் ஊணும் வெறுத்து, உறக்கமும் இன்றி உடல்நலம் குன்றுவது கண்டு கலங்கிள்ை. தன் மகளின் பண்டைய அழகை எண்ணுகிருள் ; ஒளிவிடும் அவள் நெற்றி; தழைத்துக் கறுத்து நீண்டு வளர்ந்த அவள் தலே. மயிர்; மின்னும் அவள் மேனி அழகு; இவை, அவள் கண் முன் வந்து கிற்கின்றன; அவ் வழகைக் கண்டு களித்த தன் கண்களால், அழகுகெட்ட அவளேயும் காணவேண்டி நேர்ந்ததே என உளம் நொந்தாள் ; அவ்வூரில் உள்ள அனைவரையும் அவள் துயர்க் காரணம் யாதாம் எனவும், அதற்கு மருந்து யாது எனவும் வினவியும் பயனில்லை; அவர்கள் யாரும் அதன் உண்மைக் காரணத்தையும் ஏற்ற. மருந்தையும் கூறினால்லர்; அவர் கூறிய முறைகளே,