பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

喇 業 க. கருவூர்ச் சேரமான் சாத்தன் இறையனர் உருத்திரன், சத்தினாதன், பெருந்தேவு ஞர், பேரெயில்முறுவலார், வெண்பூதியர் முதலாய சிவனுக் குரிய பெயர்களையும், கண்ணன், தாமோதரன் முதலிய திருமாலுக்குரிய பெயர்களையும், பதுமன்போன்ற நான் முகனுக்குரிய பெயரையும், குமரன், கந்தன் என்பன போன்ற முருகனுக்குரிய பெயர்களேயும் புலவர்கள் தங்கள் பெயர்களாக மேற்கொண்டிருந்தனர்; இப்பெயர்களே அல்லாமல் கொற்றன். சாத்தன், தேவன், பூதன் போன்ற சிறு ெ தய்வப்பெயர்களும் புலவர் பெயர்களாகப் பெரு, வழக்காய் ஆளப்பட்டுள்ளன. அத்தகைய பெயர்களுள், ஒன்ருகிய சித்தன் என்பதைக் கருஆர்க்கண் இருந்து ாண்ட சேரமான்களுள் ஒருவராய நம்புலவர்ப்பெரும் لإكي தகையார், தம் பெயராகக் கொண்டுளார். அப்பெயர், - ஐயனர்க்குரிய பெயராம். ஆக இவர் பெயரால், இவர் சேர அரசர் மரபைச் சேர்ந்தவர், கருவூர்க்கண் இருந்து அரசர்ண்டவர், சிறு தெய்வங்களேயும் வழிபடும் அளவு கடவுளன்பு கொண்ட குடிவந்தவர் என்ற இவர் வரலாற் நினை அறிகிருேம். இவர் பாட்டாக நமக்குக் கிடைத்துளது. கு றுந்தொகைக்கண் வந்துள்ள செய்யுளொன்றே : அ.இ? கூறும் பொருள்: -- - தலமகள் ஒருத்தியைக் கண்டு காதல்கொண்டாளுெரு தலைமகன். தம் காதலொழுக்கத்தைச் சில நாள்வரை எவரும் அறியாகிலேயில் மேற்கொள்ள விரும்பினுன் ; அத்தகைய களவொழுக்கத்தில் பேரின்பம் இருப்ப ஒல், அவன், இரவில் கடத்தற்கரிய வழி பல கடந்துவந்து . தலைவியைக் கண்டு செல்வானுயின்ை. இவ்வொழுக்கத்தைத் தலைமகளும் விரும்புகிருள் எனினும், அவன் வருங் காலக் கொடுமையும், வழியின் தமும் அவளுக்கு அச்சத்தை அளிக்கலாயின. தலைமகளின் அன்பையும், அச்சத்தையும் ஒருங்குணர்க்க அவள் தோழி, அதற்கொரு மருந்தினத் தேடல்ாயினள் தல்வனே இன்றி வாழ்வதோ அரிது: