பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18. ஏனாதி நெடுங்கண்ணனார்

ஏனாதி நெடுங்கண்ணனார், பாண்டியன் ஏனாதி நெடுங் கண்ணனர் என அழைக்கப்பெறுதலால், அவரைப் பாண்டியர் குடிவந்தவர் என்று கூறிவிடுதல் இயலாது ; படைத் தலைமை பூண்டு சிறந்தார்க்கு, அரசர்கள் ஏனாதி என்ற சிறப்புப்பெயரையும், அதற்கு அடையாளமாக ஏனாதி என்ற பெயர் பூண்ட மோதிரத்தையும் கொடுத்துப் பெருமை செய்வர். அவ்வாறு பட்டம் பெற்ற பாண்டியர் படைத் தலைவர், பாண்டியன் ஏனாதி என்றும், சோழர் படைத் தலைவர், சோழிய ஏனாதி என்றும் அழைக்கப் பெறுவர். சோழிய ஏனாதி திருக்கிள்ளி என்பாரையும் காண்க. இதனால், நெடுங்கண்ணனார் என்ற இயற்பெயர் பூண்ட இவர், பாண்டியர் படைத்தலைவராய்த் தொண்டாற்றினர் என்பது அறியப்படும். பகைவர் படை வருகையினை, அது மிகச் சேய்மைக்கண் இருக்கும்போதே அறிந்து ஆவன மேற்கொள்ளும் இவர் அறிவுடைமை கண்டு, சேய் நிலத்து நிகழ்ச்சிகளையும் அறிந்துகொள்ளும் அவர் அறிவின் தொழிலே, அவர் கண்மேலேற்றி நெடுங்கண்ணனர் என இவருக்குப் பெயர் சூட்டினர் என்றும் கொள்ளலாம்.

தமிழ்நாட்டுப் படை மறவர்கள் போர்ப்பயிற்சி ஒன்றே அறிந்தவரல்லர் அவர்கள், கலை பல கற்று, காவியப் புலமையும் பெற்றிருந்தனர் என்பதற்குப் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனர் ஒர் எடுத்துக்காட்டாவார்; இவர் பாடியனவாக நமக்குக் கிடைத்த பாக்கள் இரண்டு.

தலைமகள் ஒருத்தியின் அறிவு, உரு, திரு முதலாயின கண்டு காதல்கொண்டு, கலங்கி உடல் மெலிந்த தன்னைப் 'பெண்ணொருத்தியால் பெற்ற பெருந்துயர் இது எனக் கூறல் நின் ஆண்மைக் கழகாமோ" எனக் கடிந்துரைக்கும் தன் பார்ப்பனத்தோழனை, "நண்ப! என்னைக் கழன்றுரைக்கும் நீ, நீ கற்ற வேதத்துள், என் துயர் போக்கற்காம் மருந்து ஏதாயினும் உளதோ என அறிந்து கூறு : இன்றேல், அறிவுரை கூறி மயங்குவதைக் கைவிடு," எனக்