இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஏளுதி கெடுங்கண்ணஞர் 95.
நேரத்தில் பகைவர் படை உட்புகுந்து விடுமோ ' என்ற அச்சத்தால் உறங்காதிருத்தலை உவமை கூறியுள்ளார் :
- "மனேபாழ் பட்ட மரைசேர் மன்றத்துப்
- பணைத்தாள் யானை பரூஉப்புறம் உரிஞ்சச்
- செதுகாழ் சாய்ந்த முதுகால் பொதியில்
- அருஞ்சுரம் நீந்திய வருத்தமொடு கையற்றுப்
- பெரும்புன் மாலை புலம்புவத்து உறுதர
- மீளி உள்ளம் செலவுவலி உறுப்ப
- தாள்கை பூட்டிய தனிகிலே இருக்கையொடு
- தன்நிலை யுள்ளும் நம் நிலை உணராள்,
- இரும்பல் கூந்தல் சேயிழை மடங்தை
- கனையிருள் நடுநாள் அணையொடு பொருந்தி
- வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு ஐதுயிரா,
- ஆயிதழ் மழைக்கண் மல்கநோய் கூர்ந்து
- பெருந்தோள் நனைக்கும் கலுழ்ந்துவார் அரிப்பனி
- மெல்விரல் உகிரில் தெறியினள் வென்வேல்
- அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
- ஒருங்ககப் படுத்த முரவுவாய் ஞாயில்
- ஒரெயில் மன்னன் போலத்
- துயில்துறங் தனள்கொல்! அளியள் தானே.”
(அகம் : 373.)