பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. கக. ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒலிய மங்கலமும் அதைச் சூழ உள்ள நாடும் பண்டைக் காலத் தில் ஒல்லையூர் எனவும், ஒல்லையூர் நாடு எனவும் முறையே பெயர் பெற்றிருந்தன. சோழ நாட்டிற்கும் பாண்டி காட்டிற்கும் எல்லையாக ஒடும் வெள்ளாற்றின் தென்கரை, தென்கோளுடு என அழைக்கப்பெறும். இத் தென் கோனுட்டின் மேலேப் பகுதியே ஒல்லையூர் நாடு. ஒல்லையூர் நாடு பாண்டிய நாட்டின் வடவெல்லே நாடாகும். ஒருகால் அதைச் சோழர்கள் கைப்பற்றிக் கொண்டனர்; இதல்ை பாண்டியர் குடிக்கு உண்டாகிய சிறுமையைப் போக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட பூதப்பாண்டியன், அந்நாட்டின்மீது படையொடு சென்று அதை வென்று . மீண்டும் பாண்டியர் உடைமை யாக்கினன். பூதப் பாண்டியனின் செயற்கரும் இச்செயல் கண்ட பாண்டிப் பெருமக்கள், அவன் வெற்றி விளங்குமாறு, ஒல்லேயூர் தந்த என்ற அடையினே அவன் பெயர்முன் கொடுத்துப் பெருமை செய்தனர். . பூதப்பாண்டியன், பாடிய பாட்டாக இப்போது இருப்பன இரண்டு அவற்றுள் புறநானூற்றில் வரும் செய்யுளொன்றே, அவன் ஆற்றல், அன்பு, நட்பாடற் பண்பு, நாடாள் சிறப்பு ஆய இன்னபல் குணங்களே, அவன் புலமைத் திறத்தோடு உணரத் துணைபுரிகிறது. பாண்டியர்க்குப் பகை வேந்தர்களாகிய சேரனும் சோழனும் சிங்கம்போல் சினந்து, தொடங்கிய வினையை இடையில் மடங்காது முடிக்கவல்ல தம் பெரும்படை யோடு பாண்டி நாட்டின்மீது போர் தொடுக்கப் போகின் றனர் என்ற செய்தி பூதப்பாண்டியனுக்குப் பெருங் கோபத்தை உண்டாக்கிவிட்டது: "என்னோடு போரிட விரும்புவோர் வருக ! வருகின்றவர் பாவரேயாயினும் போர்க்களத்தில் அலற அலறத் தாக்கி, அவர்களும், அவர் கள் தேர்ப்படைகளும் தோற்றுப் பு மங்காட்டி ஒடுமாறு: