பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி 101 "விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று' (திருக் : அ.உ) என்ற குறள் நெறியுணர்ந்து, அமிழ்தமே கிடைக்கினும் அது உடற்கும் உயிர்க்கும் உறுதி தருவது என்ற காரணத் தால், அதைத் தாமே தனித்து உண்ணுர் , எவரையும், எதையும் வெறுத்து ஒதுக்கார் ; அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்ப ஆதலின், அஞ்ச வேண்டிய பழி பாவங் களைக் கண்டஞ்சுவர் ; சோம்பித்திரியும் இயல்பினரல்லர் ; புகழ்தரும் செயலாயின், அச்செயலேத் தம் உயிரைத் தந்தும் செய்து முடிப்பர் ; பழிதரு வழிவரும் செல்வம், உலகளவு உயர்ந்த செல்வமாயினும், அதைக் கொள்ளார் ; எதற்கும் கலங்காத் திண்ணிய உள்ளம் உடையார் : கூறிய இக்குணங்களால் மாண்புற்றதோடு எதைச் செய்யினும், அதில் சுயநலம் காணுது - எதையும் சுயநலம் கருதிச் செய்யாது, எதைச் செய்யினும் இதனுல் உலகிற்கு என்ன பயன் என்று எண்ணி, எதையும் உலகநலம் கருதியே செய்யும் சிறப்புட்ையவர். இந்தக் குணங்களுள் ஒன்றை யும் ஒழியாமல் அனேத்தையும் பெற்றவரே பெரியார் என்று பெரியார் பண்புரைக்கும் அவர் சொற்கள், உண்மையில் இவரே பெரியார் : ஒப்புயர்வற்ற பெரியார் : இளம் பெரு வழுதி என்ற பாராட்டிற் குரியார் என்பதை உறுதி செய் வனவாமன்ருே ? இக்கருத்துரைக்கும் அவர் பாட்டு இது : 'உண்டா லம்மஇவ் வுலகம் : இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத் தமியர் உண்டலும் இலரே : முனிவிலர் ; துஞ்சலும் இலர் ; பிறர் அஞ்சுவது அஞ்சிப், புகழ்எனின் உயிரும் கொடுக்குவர் ; பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் : அயர்விலர் ; அன்ன மாட்சி அனேய ராகித் தமக்கு என முயலா கோன்தாள் பிறர்க்கு என முயலுகர் உண்மை யானே." - (புறம் : க.அ.உ}