பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி 103. வாழ்ந்த தமிழகம், இன்று உலகோர் துணைவேண்டி கிம்ப் தற்குத் தமிழரசர்களிடையே ஒற்றுமை நிலவுவதற்கு மாருகப் பகையும் பொருமையும் கிலேபெற்றிருந்தமையே காரணம்; அவர்கள் பகையும், பொருமையும் கொண் டிருந்த காரணத்தால், அவர்கள் தங்களுக்குள்ளேயே பல போர்களே இடைவிடாது மேற்கொண்டு தமிழ்நாட்டின் வளமும், வாழ்வும் குன்ற வழி செய்து விட்டன்ர். உக்கிரப் பெருவழுதியார், தமிழரசர்கள் செய்த தவறை உணர்ந்த வர் ; தம் காலத்தே வாழ்ந்த ஏனேச்சேர, சோழ அரசர் களோடு பகைகொண்டு வாழாமல் கட்புப்பூண்டு வாழ்ந்தார்; தமிழரசர்களிடையே காணப்படும் இவ்வொற்றுமை, அக் காலத் தமிழ்ப்புலவர்களுக்குப் பெரு மகிழ்ச்சியைத் தந்தது. அருந்தமிழ் மூதாட்டியாம் ஒளவையார் உக்கிரப் பெருவழுதி, சோமான் மாவெண்கோ, இராசசூயம் வேட்டி பெருகற்கிள்ளி என்ற இருபெரு வேந்தரோடு கட்டப்பூண்டு ஒருங்கிகுந்த காட்சியைக் கண்ணுரக் கண்டு களித்துக் கவி பாடிட பாராட்டியுள்ளார். - கணவன் செய்யும் எத்துணேப் பெரிய தவற்றினேயும் மறந்து மன்னிக்கும் மாண்புடையவள் தமிழ்மகள்: வள் ளுவர்வழிவந்த ஒரு தமிழ்மகள், 'எழுதுங்கால், கோல்கோளுக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட விடத்து' (திருக் கடிஉஇ} என்று கூறுவது காண்க. உக்கிரப் பெருவழுதியார் அறிந்த ஒரு தமிழ்மகள், 'பரத்தையர் உறவுபூண்டு தகா ஒழுக்கம் மேற்கொண்டு வாழ்ந்த தலைவன் என்வீடு சோக்கி வந்தவிடத்து, அவன் தவறுகண்டு, அன்பிலே, கொடியை' என்றெலாம் கடிந்துரைப்பதற்கு மாருக, கன்கு உழப்பெற்று உலர்ந்து புழுதியான ஒரு கிலத்தில் பெருமழை பெய்தக்கால், அப்புழுதி காைந்து குழைந்து போவதேபோல் என் உள்ளமும், தலைவன் கலேயளி கண்ட வுடனே, நெகிழ்ந்து அவைேடு கலந்துவிட்டது,' என்று கூறுகிருள் : - -