பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ.உ. குறுவழுதியார் பெருவழுதி, குறுவழுதி என்ற பெயர்கள் பாண்டியர் குடியில் பயில மேற்கொள்ளப்பெற்றுள்ளன. அண்டர் மகன் குறுவழுதியார் வேறு; குறுவழுதியார் வேறு. இவர் பாடிய பாட்டொன்று நெடுந்தொகைக்கண் வந்துள்ளது. தலைவி, தலைவளுேடுகூடி மகிழ்ந்த கழியும், கானலும் காண்தொறும், தலைவனே இடைவிடாது பெற்று இன்பம் உற எண்ணி, அத் தலைவர் ஆண்டு வாராரோ என ஏங்கி வருந்துவள் என்பதனால், தலைவி, தலைவனே இன்றியமை யாள் என்பதையும், தாய், தன் மகள் முன்னேயினும் பேரழ குடையளாதல் அறிந்து, அவள் அவ்வழகோடு புறத்தே போதல், அவள் பெண்மைக்குக் கேடுண்டாதலும் கூடும் எனும் அச்சத்தால் இற்செறித்துவிட்டாள் என்பதல்ை, தலைவனும், தலைவியும் பண்டேபோல் களவில் கூடிமகிழ் தல் இயலாது என்பதையும் எடுத்துக்கூறி, இவ்விடையூறு நீங்கற்கு வழி, தலைவன் தலைவியை விரைந்துவந்து வரைந்து கொள்வதே என்பதை விளக்கினுள் தோழி என்ற அறையமைந்த பாடலே அழகாகப் பாடியுள்ளார் புலவா. "எல்லினே பெரிது’ எனப் பன்மாண் கூறிப் பெருந்தோள் அடைய முயங்கி டுேகினேந்து அருங்கடிப் படுத்தனள் யாயே' 'கழியும் கானலும் காண்தொறும் பலபுலந்து வாரார் கொல்எனப் பருவரும் தாரார் மார்ப ! நீ தணந்த ஞான்றே." (அகம் : கடு0)