பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களுள், கலேயாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் கலைசிறந்தே குவன் இவனேப் பாடிய புலவர்கள் பலராவர்; பத்துப் பாட்டுள் நெடுநல்வாடையும், மதுரைக் காஞ்சியும் இவன் புகழ் பாடவந்த நூல்களாம். இவ்வாறு இவன் புலவர் பலர் பாராட்டைப் பெறுவதற்குக் காரணமாவது, அவன் தலையாலங்கானத்தே பெற்ற பெரு வெற்றியே யாகும். நெடுஞ்செழியன் அரியணை ஏறுங்கால் மிகமிக இளையவன் : பொதியமலைப் பல்வளமும், கொற்கைத்துறை முத்தும் பெற்று, பாண்டிநாடு பெருஞ்செல்வத்தால் பொலிவுற்று விளங்கிற்று இதைக் கண்ணுற்றனர் அவன் பகைவர்கள் ; யானேக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், ஒரு சோழனும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய இவர்களும் அவன் பகைவ. ராவர்; இவர்கள் எழுவரும் செழியன் கடிதிளேயன் ; அவனே வென்று பெறும் பொருள் மிகப்பல' என்று எண்ணி, அனவரும்கூடி, அவனே அவனுார் வாயிலிடத்தி லேயே எதிர்த்தனர்; இளைஞனே எனினும், ஈடிலாத் திறனுடையணுகலின், அவர் செயல்கண்டு காணித் தன் வாயிலில் வந்து கின்ற அவர்களே எதிர்த்துப் போரிட்டான்; அவன் போர்வன்மைக்கு ஆற்ருது, அரசர்கள் தோற்றேட லாயினர் தோற்ருேடும் அவரைத் துரத்திச்சென்று, தஞ்சைமரவட்டத்தில், தலையாலங்கானம் என்னுமிடத்தில் மடக்கிப் போரிட்டு வென்ருன்; எதிர்த்த ஏழரசர்களேயும் இளமைக்காலத்திலேயே வென்ற சிறப்பறிந்து, அவ்வெற். றிச்செயலே அவன் பெயரோடு இணைத்துப் பாராட்டினர் : "ஒருவனே ஒருவன் அடுதலும் தொலேதலும் புதுவதன்று; இவ்வுலகத் தியற்கை : இன்றி லுரங்கோ கேளலம்...... பொருதும் என்று தன்தலை வந்த