பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.08 காவல பாவலர்கள் மாருது வீழ்ந்துகொண்டிருக்கவும் காலத்தின் அருமையினே எண்ணிப்பாராமல், வாடை வீசுவதால், தெற்கே சாய்ந்து விள்ங்கும் அழல்களேக்கொண்ட பெரிய பாண்டில் விளக்கு சளே ஏந்திப் பலர் முன்னேசெல்ல, மழைத்துளி மன்னன்மீது விழாமை குறித்து வெண்கொற்றக் குடை ஏந்தி ஒருவன் பின்னேசெல்ல, செழியன், காற்ருல் அலேப்புண்டு கீழேவிழும் மேலாடையினே இடக்கையால் பற்றிக்கொண்டு, தோளில் தொங்கும் வாள்மீது வைத்த வலக்கையணுய், வழியில் வரிசையாக கிற்கும் குதிரைகள் உதறிய அவற்றின் உடல் நீர் தன் மேல்படச் சேறு கிறைந்த தெருவிலே கடந்து சென்று, தலையில் வேப்பந்தாரும், கையில் நெடிய வேலும் கொண்ட படைத்தலைவன் புண்பெற்ற வீரர்களேயும், அவர்கள்பெற்ற புண்களின் கிலேயினேயும் காட்டிக்கொண்டே செல்ல, பின்னே அவ்விரர்களுக்கு அன்புரை வழங்கிக் கொண்டே செல்கிருன்” என்று பாடியுள்ளார். நெடுஞ்செழியனைப் பாராட்டிய புலவர்களுள் தலே சிறந்தவராய மாங்குடிகிழார், 'நெடுஞ்செழியன், நண்பராய் அன்புகாட்டுவார் குடிஉயரத் துணைபுரிவான் ; தன்னேப் பகைத்தார் குடியைப் பாழர்க்குவான்.” 'நட்டவர் குடி உயர்க்குவை செற்றவர் அரசு பெயர்க்குவை" (மதுரைக்: க.க.உ) என்றும், 'பெறுதற்கு அருமைவாய்ந்தன எனப் பிறர் கருதும் பொருள்களே எல்லாம் எளிதிற்பெற்று, அவ்வாறு பெற்ற பொருள்களேத் தனக்கென வைத்துக்கொள்ளாது, தன்பால் வந்து இரப்பார் அனேவர்க்கும் வாரி வழங்குவன்.' "அரியவெல்லாம் எளிதினிற் கொண்டு - உரியவெல்லாம் ஓம்பாது வீசி' (மதுரைக் கசசு-எ) என்றும், "ஒரு பொய் கூறுவதால் உலகமும் அமிழ் தமும் ஒருங்கே வருவதாயினும், பொய்கூறலே மறந்து வாய்மையே வழங்குவன்' . - *