பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உச, நல்வழுதியார் "ஓங்கு பரிபாடல் என உயர்த்திக் கூறப்பெறும் பரி பாடலில், வையையாறு குறித்துப் பாடிய புலவர்களுள் இவரும் ஒருவர் என்பதல்லது, கல்வழுதியார் வரலாறு ஒன்றும் தெரிந்திலது வையையாறு குறித்த அப்பரி பாடலில், பண்டைத் தமிழக மக்கள் ஆற்றில் புதுப்புனல் வருங்கால் மேற்கொள்ளும் புனல்விழா நன்கு புனேந்து உரைக்கப்பட்டுள்ளது. மேற்குமலேயில் மழைபொழியப் புனல் மிகுந்து, மலேச்சாரல் மலர்களேயெல்லாம், புனல்யாறு அன்று, பூம்புனல் யாறு' என்னும்படி, வாரிக்கொண்டு, கரையில் உள்ள அகில் சந்தனம் முதலாம் மரங்களே வீழ்த்தி அடித் துக்கொண்டு கடல் பொங்கி வருவதேபோல் வரும். வையையாற்றின வருகையினேயும், வையையில் புதுப்புனல் வரவு கேட்ட மதுரை மாநகர் மக்கள் எல்லாம், அழகிய ஆடையும் அணியும் அணிந்து, யோசனே ஆாரம் கமழும் வாசனே யுடையராய்க் குதிரைமீதும், யானேமீதும், தேர்மீதும் இவர்ந்து வையைக் கரை சேர்தலேயும், * வையைக்கரையில், குழல், முழவு, மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி முதலாம் பல்வேறு இசைக்கருவிகளி னின்றும் எழும் இன்னிசைகளுக்கிடையே, ஒன்றை யொன் அறு ஒவ்வாத கிலேயில் மக்கள் வழங்கும் பல்வேறு உரையாடல்களையும், புனல்விழாக் காண வந்தோர்தம் கண்கள் களிகொள்ள நிகழும் பல்வேறு கர்ட்சிகளேயும் புலவர் நல்வழுதியார் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார். புனல்விழாக் காணத் தன்ைேடு வந்திருக்கும் தன் கணவனே வேறு ஒருத்தி நோக்கினுள் என்பதற்கே, "அவள் நோக்குமளவு பிழையுடையான் போலும் இவன்' என்று எண்ணி, அவன்மீது சினம்கொண்டு, தன் மலர் மாலேயால், புடைத்தும், முத்துவடத்தால் கைகளைப்