பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்டுைதந்த பாண்டியன் மாறன் வழுதி 115 'அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா எவ்வ கெஞ்சத்து எஃகெறிக் தாங்குப் பிரிவில புலம்பி நுவலும் குயிலினும், தேறுநீர் கெழிய யாறுகனி கொடிதே; அதனினும் கொடியாள் தானே, மதனின் துய்த்தலே இதழ ப்ைங்குருக் கத்தியொடு பித்திகை விரவுமலர் கொள்ளி ரோஎன வண்டுசூழ் வட்டியள் திரிதரும் தண்டலை உழவர் தனிமட மகளே.' (கற்: கன்) தலைவிக்குத் துயர்விளக்கும் இக்காட்சிகள், இப் பாட்டைப் படிப்பார்க்குப் பண்டைய தமிழகத்தின் மாலேக் காட்சி யொன்றை மனத்திரையில் படம்பிடித்துக் காட்டி மகிழ்ச்சி அளித்தலே அறிந்து மகிழ்க. - மக்கள், தாம் துயர்கிலேயினராயவழிப் பிறரும் துயருற விரும்புவர்; அவ்வாறு அயருருது மகிழ்வாரைக் காணின் சினப்பர் என்பதால் உள்ளத்தின் இயல்பு இது என உணர்த்தும் அவர்புலமை நலத்தை உன்னுக. அறத்தால் பொருளும், பொருளர்ல் இன்பமும் பெற்ற தமிழர்கள், தாம்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உயர் நோக்குடையாாய், ஏனைய மக்களும், அம் மூன்றனேயும் பெற்று வாழ்தற்குத் துணைபுரியும் மழை பெய்யவேண்டி வாழ்த்துவர் என்ற உண்மையினேப் பொருள்பெற்று மீண்டு தலைவியோடு கூடியிருக்கும் தலை மகன் ஒருவன் பெய்க பெருமழை என வேண்டின்ை எனப் பாடி உணர்த்தியுள்ளார்; அத்தலைவன், பெரிய மேகமே! இருள் கெடுமாறு மின்னி, குளிர்ந்துவிழும் மழைத்துளிகளே மக்கள் மனம் மகிழ வீசி, முரசுபோல் இடித்துப் பெய்வாயாக’ என வேண்டுவது காண்க : "தாழிருள் துமிய மின்னித், தண்ணென வீழுறை இனிய சிதறி, ஊழின் - கடிப்பிகு முரசின் முழங்கி, இடித்திடித்துப் பெய்திணி வாழியோ! பெருவான்!" (குறுங்: உஎ0).