பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவு. இளந்திரையன் காஞ்சியைத் தலேநகராகக் கொண்டு, அதைச் குழு உள்ள நாடு, பண்டு அருவாநாடு எனப் பெயர்பெற்று விளங்கிற்று அங்காட்டில்வாழ் மக்கள் அருவாளர் என அழைக்கப் பெற்றனர் ; கரிகாலன் காலத்திற்குப் பிறகு, அந்நாடு, தொண்டையர் என்பார் ஆளுகைக்கு உட்பட்ட தால், அது தொண்டையர் நாடு அல்லது தொண்டைநாடு என்ற பெயர் பெற்றது; அத்தொண்டை நாடு வட வேங்கடம்வரை பரவியிருந்தது. அத்தொண்டையர் வழி யில் திரையன் என்பாளுெருவன் தோன்றி, பவத்திரி என்ற ஊரை உரிமைகொண்டு வேங்கடத்தைச் சூழ உள்ள அந்நாட்டை ஆண்டு வந்தான். இவனே பெரும்பானுற் ஆறுப்படை பெற்ற தொண்டைமான் இளந்திரையனுவன் ; இவனேத் ' தொண்டையோர் மருக!,' எனப் புலவர் அழைப்பதும் காண்க. • இருநிலங் கடந்த திருமறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை அங்ர்ே திரைதரு மரபின் உரவோ னும்பல்” (பெரும்பாண் : உக. க) என்ற பெரும்பாணுற்றுப்படைத் தொடரால், இவன் முன்னுேர் திரைகடல் வழியாகப் போந்து தொண்டை நாட்டிற்கு அர்சராய்த் திரையர்' என அழைக்கப் பெற்றனர் என்பது அறியலாம். வென்வேற்கிள்ளி என்னும் சோழனுக்கும் நாகநாட்டு அரசன் மகள் பீலிவளேக்கும் பிறந்து, கடலில் கலமூர்ந்து வருங்கால் கலம் அழிய, திரையில் மிதந்து கரையடைந் தமையால் திரையன்' என்றும், அரசன் மகன் என்பதற்கு அடையாளமாகத் தொண்டைக்கொடி அணிந்து வந்தமை பற்றித் தொண்டைமான் என்றும் அழைக்கப்பெற்ருன் என அறும் கூ-அப.