பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 காவல பாவலர்கள் வோன் ஆற்றல் ஆற்றலின்மைகளினலேயேயாம் ; ஆள் வோன், ஆளும் நெறியறிந்தோளுயின், எத்துணேச் சீர் கேடுற்ற அரசும் சீர்பெற்றுயரும் , அவன்பால் அவ்வாற்றல் இன்முயின், அவல்ை செலுத்தபடும் அரசு எத்துணேப் பலம் பொருந்தியதாயினும் அஃது அழிதல் உறுதி. அரசியல் பற்றிய இக்கருத்தை விளக்க வந்த இளக் திரையன், 'உருளேயும் பாரும் கோக்கப் பெற்று கிலத்தில் நன்கு ஒடும் உறுதி வாய்ந்த வண்டி, அதை ஒட்டுவோன் அத்தொழிலறிந்து மாண்புற்ருேளுயின், கேடொன்று மின்றி வழியில் இனிது செல்லும்; அவன் அதனே ஒட்ட அறியானுயின், அது நெறியல்ல்ா நெறிச்சென்று சேற்றிலும் மணலிலும் சிக்கிச் சீரழிந்து பெருந்துன்பத்தைத் தரும்" என வண்டியின் இயல்பை எடுத்துரைத்து விளங்க வைக்கும் திறம் வியக்கத் தக்கதாமன்ருே ? கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும் காவற் சாகாடு உகைப்போன் மாணின், ஊறின் ருகி ஆறினிது படுமே; உய்த்தல் கேம்ரு யிைன், வைகலும் பகைக்கூழ் அள்ளம் பட்டு - மிகப்பல் திநோய் தலேத்தலைத் கருமே.” (புறம் :கஅடு.) குற்றினேயில் வரும் அவன் பாக்கள் மூன்றனுள், தலைவன் குறித்துச் சென்ற பருவம் வந்துற்றமை கண்டு வருந்தும் தலைமகளேத் தோழி, இது பருவமன்று எனக் கூறி ஆற்றும் துறையமைந்த பாடல் மிகவும் நயம் செறிந்து விளங்குகிறது. கார்காலத்தே மலரும் இயல்புடையன பிடவு, கொன்றை, காங் தள் முதலாயின. அவை மலர்ந்து விட்டதைக் கண்டுகொண்ட தலைவி, கார்காலம் வங் துற்றது என எண்ணி, கார்காலம் தொடங்கியும் அவர் இந்திலரே! என வருந்தினுள் இங்கிலேயில் அவ&ளத் தேற்ற வழியறியாத தோழி, 'கம் தலைவர் பொய் அருர் என்பதை கீ அறிவாய் ஆகவே அவர் கார்காலக் 慈慧 . இதே கில்லாது வருவார் ஆல்ை, கார்காலம்