பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்திரையன் 123. இதோ வந்துற்றதே இன்னும் அவர் வந்திலரே என வருக்துகின்றன ; இது உண்மையில் கார்காலமன்று : அவ்வாருயின் கார்காலத்தே மலரும் இயல்புடைய மலர்கள் மலர்ந்து விட்டனவே எனக் கேட்டல் கூடும்; இம்மலர்கள் காலமல்லாக் காலத்தே மலர்ந்துள்ளன ; மழை பெய்வது கார்காலத்தில் என்ற கருத்துடைய அம்மலர்கள் மழை பெய்தது கண்டு மலர்ந்து விட்டன : ஆளுல், இது கார் காலத்து மழையன்று அறிவில்லாமையால் இது எந்தக் காலம் என்பதை மறந்துவிட்ட மேகம், இந்தக் காலத்தைக் கார்காலம் என்று எண்ணிக் கடல்நீரைக் குடித்துவிட்டது ; பின்னர் இது கார்காலமன்று என்பதை உணர்ந்தும், உண்டைேரத் தாங்கி கிற்கமாட்டாமல் பெய்துவிட்டது ; அதல்ை உண்டாய மாறுதல் இது; உண்மையில் இது கார் . காலமன்று ; ஆகவே அவர் வந்திலரே என்று எண்ணி வருந்தற்க' என்று கூறினுள் எனப் பாடியுள்ள அழகைப் பருகுங்கள் ; "வெஞ்சுரம் இறந்தோர் தாம்வரத் தெளித்த பருவங் காண்வர இதுவோ என்றிசின் மடங்தை ! மதியின்று மறந்து கடல்முகங்த கமஞ்சூல் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல் கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில பிடவும் கொன்றையும் கோடலும் மடவ வாகலின் மலர்ந்தன. பலவே." (கற் : கூக}