பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 காவல பாவலர்கள் நெஞ்சம் நடுக்குறு உம் துஞ்சா மறவர் திரைதபு கடலின் இனிதுகண் படுப்பக் கடாஅம் கழி இய கதனடங்கு யானேக் - தடவுகிலே ஒருகோடு." (நற் : க.அ). இத்தகு பெருவிரணுகிய இரும்பொறைக்கும் செங்க ன்ை என்ற சோழ அரசனுக்கும் பகை உண்டாயிற்று : இருவரும் கழுமலம் என்ற நகரை அடுத்துள்ள திருப் போர்ப்புறம் என்ற ஒரிடத்தே போரிட்டனர் : "யானேக் கும் அடிசறுக்கும் என்ப பெரும்படையும் பேராண் மையும் உடையாளுகிய சேரமான் கணக்காலிரும்பொறை, சேர்ழன் தன் பெரிய யாசீனப்படையினே வெல்லமர்ட்டாது தோற்ருன் , செங்களுன் தோற்ற சேரனேக் கைப்பற்றிக் கொண்டுபோய்க் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் காவல் வைத்தான். சிறையில் இருந்த சேரன், ஒருநாள் சிறைக்காவலரை உண்ணிர் தரவேண்டினன்; அவர்கள் அவனுமொரு சிறைக் கைதியே என்ற எண்ணமுடையராய், ஏனேக்கைதிகள் பால் நடந்துகொள்வதேபோல் அவன் கேட்டபோதே தாராது காலம் தாழ்த்தித் தந்தும், தரும்போதும் அரசன் என்ற மதிப்பின்றித் தந்தும் இழிவு செய்தனர்; காவலர் தம் இவ்இழிசெயல் பொருத அரசன், அவர் தந்த அங்கீரை உண்ணுது ஒருபால் வைத்துவிட்டு, - ‘போர்க்களம்புக்குப் போரிட்டு வாள்வடுப் பெற்ற வர்க்கே துறக்கத்தில் இடமுண்டு என்ப; இறந்து பிறந்த குழந்தையும், உருவின்றிப் பிறந்த ஊன்தடியும் அத்தகு வாள்வடுப்பெறும் வாய்ப்பினேப் பெறுவதில ஆதலின் அவை துறக்கம் புகா ஆல்ை, அவற்றையும் துறக்கம் அனுப்பும் உள்ளத்தராய அரசர்கள், அவற்றைத் தருப் பைப்புல்மீது கிடத்தி வெற்றிவீரர் சென்ற வழியே இவையும் செல்க' என வாழ்த்தி வாளால் வெட்டிப் புதைப்பர்; இஃது அரசர்கள் பண்பு ; அத்தகைய அரசர் மரபிலே, சங்கிலியால் பிணிக்கப்பட்டு இழுத்துச் செல்லப் படும் நாய்களேபோல், பகைவரால் தளசெய்யப்பெற்று,