பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை தமிழரசர்கள் தாம் வெற்றிபெற்ற போர்க்களப் பெயர்களைத் தம் பெயர்கள்ோடு இணைத்து ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, தேள் ளாறெறிந்த கந்திவர்மன் என வழங்கிப் பெருமை கொண் டாடுவதைப்போன்றே, அவ்வரசர்கள் இறந்த இடங்களே. யும் அவர் பெயர்களோடு இணேத்து வழங்கி வரலாற்றிற். குத் துணை புரிந்தனர். சிக்கற்பள்ளித்துஞ்சிய செல்வக் கடுங்கோ வாழியாதன், கரியாற்றுத்தஞ்சிய நெடுங்கிள்ளி, இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய கலங்கிள்ளி சேட்சென்னி, குராப் பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன், குளமுற்றத்துத் திஞ்சிய கிள்ளிவளவன், இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய கன்மாறன், கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, சித்திர மாடத்துத் துஞ்சிய கன்மாறன், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி, யானைமேல் துஞ்சிய இராசகேசரி, இரசா திராசன் என்ற பெயர்களைக் காண்க. - சேர நாட்டில் கோட்டம்பலம் என்ருேர் ஊர் உண்டு; அஃது, இப்போது அம்பலப் புழை என வழங்குகிறது : இந்த அம்பலப்புழை இன்றும் பழங்காலச் சிறப்பு வாய்க் துளது. இதை யடுத்து மாக்கோதை மங்கலம் என்ற பெய. ருடைய ஒர் ஊரும் காணப்படுகிறது; மாக்கோதை என அழைக்கப்பெறும் சேர அரசன் ஒருவன் தன் இறுதிக் காலத்தில் அக் கோட்டம்பலத்தில் வாழ்ந்து உயிர்விட்டா குதலின், அவனேக் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக் கோதை எனப் பெயரிட்டு அழைத்தனர்; சில ஏடுகளில் கோட்டம்பலத்துத் துஞ்சிய என்பது கூத்தம்பலத்துத் துஞ்சிய எனக் காணப்படுகிறது: சோகாடு கூத்துகளுக் குப் பெயர் போய்து, கூத்து கடைபெறும் கூத்தம்பலங்கள் பல, அங்காட்டின் பல பகுதியிலும் காணப்படும்; நம் மாக் கோதை அத்தகைய கூத்தம்பலத்தே இருந்து ஆங்கு கடைபெற்ற கூத்தொன்றைக் கண்டிருந்தவழி உயிர்துறம்