பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு. சேரமானெந்தை இருந்து இல்லறம் ஆற்றும் தலேமகன், அவ்வில்லற வாழ்க்கை இனிது நடைபெறுதற்குப் பெரும் பொருள் வேண்டும் : அப்பொருளேத் தேடிக் கொணர்தல் ஆண்மகற் குற்ற கடமை என உணர்ந்து, அப்பொருளிட்டும் முயற்சி மேற்கொண்டு வெளிநாடு செல்லத் துணிவன் ; வெளிநாடு செல்வோர் தம் மனேவியரையும் உடன்கொண்டு செல்லு தல் இயலாது ; அதனுல், அன்றுவரை பிரிந்தறியாத தம் மனேவியைப் பிரிந்துசெல்லவேண்டுமே என்ற எண்ணம் அவனேப் பெரிதும் கலக்குவதாயிற்று ; பிரியாது இருப் பதோ அரிது என்பதையும் உணர்கிருன் , சென்றுவரும் எண்ணமுடையேன் என்று கூறவும் அஞ்சுகிருன்; இறுதி யில் தன் கருத்தினே எவ்வாருயினும் அவள் உணரவைத்தல் வேண்டும் என உறுதிகொண்டான்; தன் கருத்தினேத் தெளிய உரைக்காது குறிப்பான் உணர்த்தத் தொடங் கிளுன், மனேவிபால் அன்றுவரை காட்டாத போன்பு காட்டக் தொடங்கினன் . கணவன்பால் காணும் இம்மாற்றம் தலே விக்கு அச்சத்தை உண்டாக்கிற்று அமைதி புயலுக்கு அறிகுறி என்ப; தலைவன் செய்யும் இத்தலேயளிக்குக் காரணம் இருத்தல்வேண்டும் என உணர்ந்தாள்; அவள் உள்ளம் சிறிதே நடுங்கத்தொடங்கிற்று: அக்கிலேயில் அவன் வெளிநாடு செல்லுங்கால் துணையாக எடுத்துச் செல்வதற்கு என வேல்களேத் துடைத்துச் செப்பனிடுவ தைக் கண்டாள் அவள் ஐயம் உறுதியாயிற்று, தலைவன் பிரிந்து வெளிநாடு செல்லப்போகிருன் என்பதை உணர்க் தாள்; உடனே தோழியை அழைத்து, "தோழி! 5ம் தலைவர் இப்போது செய்யும் மிக்க தலையளியும், அவரின் வேறு சில செயல்களும், அவர் பிரியும் உள்ளத்தவர் என்பதை உணர்த்துகின்றன; அவரைப் பிரிந்து யான் எவ்வாறு உயிர்வாழ்வேன்?' என்று கூறிக் கண்ணிர் விட்டுக் கலங்குவர்ளாயினள்! தோழியோ தலைவன் பிரிந்து செல்வான்; அஃது அவன் கடமைகளுள் ஒன்று என்றெல் கா. பா.-2