சு. நம்பி குட்டுவனுர் செந்தமிழ் நிலத்தைச் சார்ந்துகின்ற பன்னிரண்டு கொடுந் தமிழ்நாடுகளில் குட்ட நாடு என்பதும் ஒன்று , அது மேலேக் கடற்கரையினைச் சேர்ந்து நிலவிய நாடாகும்; "குட்ட நாட்டார் தாயைத் தள்ளே என அழைப்பர்' என்பர் உரையாசிரியர்கள். இக்குட்ட நாட்டினே ஆளும் உரிமை பூண்ட காரணத்தால், சேர அரசர்கள் குட்டுவர் என அழைக்கப்பெறுவர். பெண்பாலரிற் சிறந்தாள்ே நங்கை எனலும், ஆடவரிற் சிறந்தானே நம்பி எனலும் புலவர் வழக்கு சேரர் குடியிற் பிறந்து, அறிவாலும், ஆண்மையாலும், அரசியல் திறத்தாலும் சிறந்து விளங்கின மையால் நம்புலவர், நம்பிகுட்டுவனுர் என்ற பெயர் பெறு வாராயினர். - - - கம்பிகுட்டுவனர் பாடிய பாடல்களுள் நமக்குக் கிடைத்தன அகத்துறைப்பொருள் தழுவிய பாடல்கள் ஐந்தே, எனினும் புலவரின் பெருமையினே விளக்குதற்குக் கிடைத்துள்ள அவ் ஐந்து பாடல்களே சாலும். - "தலைவன் வரையாது வந்து துயர் செய்கிருன் எனினும், அவனுக்குக் கேடுவருதல் கூடாது; அன்னேயோ அவன் யாண்டுளன் எனத் தேடுகிருள்; இங்கிலேயில், அவன் தேர், நம் சேரிசேர வருகின்றதே என்செய்வேன்?' என் அவனுக்காக வருந்தும் இறப்பவுயர்ந்த தலைமகள் உள்ளத் தையும், "அவன் வரையாது செய்யும் துயரை, அவன் மலே படிந்து குளிர்ந்து வரும் காற்ருவது போக்கட்டும்; ஆகவே தோழி! அக்காற்று வீசும் முன்றிற்கு என்னே அழைத்துச் செல்வாயாக,' எனக்கூறும் அவள் அன்பின் ஆழத்தையும்: அறிய அவர்பாடல்கள் துணைபுரிகின்றன. தான் மேற் கொண்டொழுகும் களவொழுக்கம் கண்டு கடியும் தன் தாயினே நாகம்போல் கொடிய ந்ெஞ்சுடையாள் கிரைய நெஞ்சத்து அன்னே, அற உள்ளம் அற்றவள் அறனில் அன்னே' என்றெல்லாம் கடிந்து கொள்ளும் தலைமகளே, அவர் பாக்களன்ருே நமக்கு அறிமுகம் ஆக்குகின்றன ,
பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/26
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை