பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ பாலபாடிய பெருங்கடுங்கோ "வெண்பாவிற் புகழேந்தி, விருத்தமென்னும் 'ஒண்பாவிற் குயர் கம்பன் * . تد ۰" என ஒவ்வொருவகைப் பாவினம் பாடுவதில், ஒவ்வொரு வர் சிறந்து விளங்குவர் எனப் பாராட்டுவதைப் போன்றே, பழங்காலப் பாவலர்கள் பெரிதும் பாராட்டிப் பாடிய பொருள்களே, அவர்களுக்கு அடையாகத் தந்து பாராட்டி யுள்ளனர்; காக்கைபாடினியார் நச்செள்ளையார், கோடை பாடிய பேரும்பூதனர், கோய்பாடியார், பாரதம் பாடிய பெருக்தேவனுர், மடல்பாடிய மாதங்கீரனுர், மருதம்பாயடி இளங்கடுங்கோ, வெறி பாடிய காமக்கணியார் என்ற பெயர் களேக் காண்க. அவ்வாறே புலவர் பெருங்கடுங்கோ, ஐந்தினேகளுள் பாலேத்தினே ஒழுக்கத்தினேப் பல்லாற் ருனும் விரித்துப் பாடியுள்ளாராதலின், அவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ என அழைக்கப்பட்டுள்ளார். பேய்மகள் இளவெயினி என்பார் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் கீழ், 'சேரமான் பாலேபாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி பாடியது," என எழுதி யிருத் தலினுல், இவர் சேரர் வழி வந்தவர் என்பது புலனும். - "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் - வலவன் ஏவா வான்வூர்தி எய்துப' (புறம்: உள்) என்ப. பரவல்ல காவலய்ைச் சிறப்புற்றதோடு, பாவ்ல ரும் பாராட்டும் பெருமை மிக்காருள் நம் பெருங்கடுங்கோ வும் ஒருவர். "நம் சேரர் பெருந்தகைக்குரிய கருவூர் வானுற் உயர்ந்த வெற்றிப்புகழ் கொண்டது: அக்கருவூர்ை அடுத்துப் பாயும் பொருநை ஆற்றில் அந்நாட்டு இளமகளிர் மணற்பாவை செய்து மலர் சூட்டியும், ஆற்றுப் புனலில் படிந்தும் ஆடி மகிழ்வர் அக்கருவூரில் இருந்து ஆட்சி புரியும் நம் பெருங்கடுங்கோ, புலவர் பாடுதற்காம் பேராற்றல் வாய்ந்தவன்; கடிய அரண் பல கடந்து அப்பகைவர் பணிந்துதந்த பெரும்பொருள் கொண்டவன் பகைவர்பால் கொண்ட பெரும்பொருளுடையானேப் பாடிப்