பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலபாடிய பெருங்கடுங்கோ 23 பாடியுள்ளார்; அவையனைத்தையும் எடுத்துக்கூறின் ஏடு விரியுமாதலின், இவற்றுள் ஒன்றுகுறித்துவரும் அவர் பாட்டு ஒன்றைமட்டும் முழுதும் காட்டி, ஏனேய பாக்களில் காணப்படும் அரிய பகுதிகளே மட்டும் எடுத்துக்காட்டிச் செல்ல விரும்புகின்றேன். பொருள்வயிற் பிரிந்துவிட்டான் தலைவன்; அவன் பிரிவினேப் பொருது தலைமகள் வருந்துகிருள்; அவள் துயர் போக்க முயலும் தோழி, அதற்கு அவளுக்கு ஆறு தல் கூறுவதினும், அவள்முன் சென்ற தலைவனின் கொடுமை கூறிப் பழித்தலே பயனளிக்கும் என, அறிக் தாள்; அவ்வாறு பழிப்பின், தன்முன் தலைவனேப் பழிகூற லேப் பொருத தலைவி, தன்துயர் மறந்து தலைவன் புகழ் பாடத் தொடங்கிவிடுவாள்; இந்த உண்மையுணர்ந்த தோழி, தலைவியைப் பிரிந்துசென்ற தலைவனின் கொடுமை யினேயும், அவன் சென்ற வழியின் கொடிய கிலேயினேயும் கூறி, இத்தகைய கொடிய வழியிலே சென்ற அவர் எப் போது வருவாரோ? அதுவரை இவள் கிலே என்னும்? இவ்வாறு இவள் வருந்தப்பிரிந்த அவர் அறிவுதான் என்னே?' என்றெலாம் கூறலாயினள்; கேட்ட தலைவிக் குச் சினம் பிறந்தது; 'தோழி; தலைவர் அறிவற்றவ. ரன்று; பொருளின் இன்றியமையாமையினே உணர்ந்தே பிரிந்துளார்; இருந்தோம்பி இல்வாழ்வது விருந்தோம்பி வேளாண்மை செய்வதற்கே துறந்தார்க்கும், துள்வா தவர்க்கும், இறந்தார்க்கும் துனேயாவானே இல்வாழ்வான் என்றெலாம் கூறுவர் பெரியோர்; அதற்குப் பொருள் வேண்டும்; வாழும் காட்டிற்குப் பகையாய் அகத்தும் புறத் தும் வாழ்வாரை வென்அ ஒழித்தால்தான் நாட்டில் அமைதி நிலவும்; அத்தகைய போராட்டத்திற்கும் பொருள் வேண்டும்; இல்வாழ்விலிருந்து குறைவின்றி நிறைந்த இன்பத்தினே. நுகர்தல் வேண்டுமாயின் அதற்கும் பொருளே இன்றியமையாதது; இதை அவர் உணர்ந்தார்; யானும் உணர்ந்தேன். அதல்ை அவர் பிரிந்தார்; பிரிந்த தில் தவருென்றும் இல்லை.