பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s?0 காவல பாவலர்கள் அவர் சென்ற காடு நெருப்பைக் கக்கிற்ைபோன்ற வெப்பம் உடையது; செல்வார் அடிவைத்து நடக்கலாகா அத்துணைக் கொடுமை யுடையது; மரங்களெல்லாம் கோடையின் கொடுமையால் இலைகளெல்லாம் உதிர்ந்து போக, முற்றும் தீய்ந்த கொம்புகளேயே கொண்டிருப்ப் தால் சேர்ந்தார் கிழல்பெருது துயருறுவர், மூங்கில்கள் உலர்ந்து வாடித் தீப்பற்றி எரிந்து செல்வார்க்குத் துயர் தரும் என்று காட்டின் கொடுமையினேக் கூறி இத்தகைய கொடிய வழியில் சென்ற அவர், எங்கினம் விரைந்து வருவர் என்கின்றன? தோழி! நீ எண்ணுவது தவறு; அவர் கூறிய காட்டின் கொடுமைகளேமட்டிலும் எண்ணிப் பார்க் கின்றனேயேயன்றி, அக்காட்டில் உள்ளனவாக அவர் கூறிய அரிய காட்சிகளே மறந்துவிட்டாய்போலும்! காடு கொடியது என்ற அவரே, அக்காட்டில்க ன்ருேடும், பிடி யோடும் உண்ணுர்ே தேடிச்சென்ற களிறு, இறுதியில் சிறிதே நீர்உள்ள ர்ேகிலே ஒன்றைக் கண்டு மகிழ்ந்து, கன்று புகுந்து உண்டு கலக்கிய நீரையும் முதலில் தான் உண்டு விடாமல், முன்னர்த் தன்பிடியை உண்ணவைத்துப் பின் தான் உண்ணும் என்றும், வெப்பத்தால் வருந்தும் தன் பெடைக்கு ஆண்புரு தன் சிறகை விரித்து நிழல் தந்து காத் துத் தான் வருந்தும் என்றும், கிழலின்றி வருந்தும் தன் பிணைக்குக் கலைமான் தன் உடல்கிழலைத் தந்து வெய்யி வின் கொடுமையினேத் தான் தாங்கி வருந்தும் என்றும், கூறியதை மறந்தனேயோ இந்த அரிய காட்சிகளைக் காணும் அவர் காலம் தாழ்த்தி கிம்பர் என்ரு எண்ணு கின்றனே? பெண் இனத்திற்குண்டாம் துயர் போக்கிப் பேணுதல் ஆண்கள் கடன் எனக் காட்டுவாழ் உயிர்களும் எண்ணுவதைக் கண்ட அவர் எனக்குத் துயர் தாரார்; விரைந்து வருவர்; அதற்கான கன்னிமித்தங்களும் தோன்றுகின்றன; அதோபார், பல்லி காம் கூறுவது உண்மை என்பதே போல் ஒலிக்கின்றது; இதோ.பார், என் இடக்கண் துடிப்பதை" என்று கூறிள்ை; இந்தக் காட்சி யைப் படம் பிடித்தாற்போல் பாடியுள்ளார் புலவர் பெருங் கடுங்கோ: