பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. மருதம்பாடிய இளங்கடுங்கோ மருதத்தினேயினே மிகச் சிறந்தமுறையாற் பாடிய டெருமையால், இவர் மருதம்பர்டிய இளங்கடுங்கோ என அழைக்கப்பெற்ஆளார். இவர் சேரர் மரபினர்; பாலே பாடிய பெருங்கடுங்கோவின் தம்பி என்று ஊகிக்கப்படு இருர் என்று கூறுகிருள் நற்றினே உரையாசிரியர். இவர் சேரர் மரபினர் என்பதை விளக்கத் தன்கசான்று எதுவும் இல்லே. இவர் பெயரும் அதற்குத் துணைபுரியவில்லை; சேரரைக் குறிக்கவழங்கும் சொல் எதுவும் இவர் பெய ரோடு சேர்ந்து வழங்கப்பெறவில்.ே கடுங்கோ என்பது செல்வக்கடுங்கோ வாழியாதன் என்ற சேர அரசன் பெய ரோடு இணேத்து வழங்கப்படுகிறது எனினும், அவன் சேரன் என்பதைக் கடுங்கோ என்ற சொல் குறிக்கிறது. என்று கொள்வதினும், அப்பெயரீற்றில் வரும் ஆதன் என்ற சொல் குறிக்கிறது என்று கொள்வதே பொருந்தும். உதியன் இரும்பொறை, ஆதன் என்ற சொற்களேப் போன்றே, கடுங்கோ என்பதும் சேரரைக் குறிக்கவரும் சொற்களுள் ஒன்று என்று சொல்வதற்கில்லே பாண்டிய அரசர்களைக் குறிக்கவும் இச்சொல் வந்துளது. களப் பிரர்களே அழித்துப் பாண்டிய அரசினே மீண்டும் கிறுவிய பாண்டிய அரசன் பெயர் கடுங்கோன் என்பதே. ஆகவே, கடுங்கோ என்ற சொல் ஒன்றைக்கொண்டே நம்புலவர் சோர் மரபினைச் சேர்ந்தவர் எனக் கோடல் பொருந்தாது. இனி, பாலேபாடிய பெருங்கடுங்கோ என்பவர் சேரர்; அவர் சேரர் என்பதை அவர் பெயர்முன் வரும் சேரமான் என்ற அடை உறுதி செய்கிறது; இவர் இளங்கடுங்கோ என அழைக்கப்பெற்றுளார்; ஆகவே இவரை அவர் இளேய ராகவும், அவரைப்போன்றே சேரமரபினராகவும் கொள் ளுதல்கூடும் என்று முடிவு செய்வதும் அத்துணே உறுதிப் பாடு உடையதன்று. - . . "தாய்போல் கழறித் தழீஇக் கோடல் - ஆய்வினைக் கிழத்திக்கும் உரித்து (தொல்:கற்பு: கூஉ ) என்பர் தொல்காப்பியனுள். மனேவியோடிருந்து இல்லற மாற்றிப் பெருமைபெறவேண்டிய கணவன், தகா ஒழுக்கம்