பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்பாடிய இளங்கடுங்கோ 41. யானேப் படை உடைமையால் போர்வல்ல சோழர் பெரும் படைமுன் நிற்கலாம்ருது இருவரும் தோற்றப் பின் னிைட்டனர்; வாளேந்தி வெற்றி கொண்ட சோழ அரசர் பகை வேந்தர் தம் யானைப் படைகளைக் கைப்பற்றிக் களித் தனர்; அத்தகைய ஆற்றல் மிக்க சோழர்க்கு மகளாம் பெருமையுடைய அஃதை என்பாள் ஒருத்தி இருந்தாள் எனக் கூறுகிருர் : 'அஃதை தங்தை அண்ணல் யானே அடுபோர்ச் சோழர் வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலே இருபெரு வேந்தரும் பொருதுகளத் தொழிய ஒன்றுவாள் கல்லமர்க்கடந்த ஞான்றைக் களிறு கவர் கம்ப8ல.' (அகம் கசு) இரை தேர்ந்துண்ணும் நாரை கண்டு அஞ்சிய கண்டு பகன்றைக் கொடி வளர்ந்து சேறுபட்ட வயலில் வடுவுண்டாக விரைந்துஒடித் தன் அளேயுட் புகுந்து அடங்கும் எனவும், கள்ளுண்ட கலத்தைக் கழுவிவிட்ட ைேரஉண்ட இருமீன், நாண் அறுந்த வில் விரைந்து எழுமாறு துள்ளி, நெற். கூடுகளின் அடிகளிற் சென்று விழும் எனவும் கூறும் மருத கிலக் காட்சிகள் மாண்புடைத்தாம் : ‘'வேப்புகனே யன்ன நெடுங்கண் ஈர்ஞெண்டு இரைதேர் வெண்குருகு அஞ்சி, அயலது ஒலித்த பகன்றை இருஞ்சேற் றள்ள ல் திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன் ஈர்மலி மண்ணனே செறியும்' "கறவுண் மண்டை நுடக்கலின் இறவுக்கலித்துப் பூட்டறு வில்லில் கூட்டுமுதல் தெறிக்கும்.' •, - (அகம்:கஎசு. கசு.)