பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேலாதன் 43. ளெல்லாம் ஒருங்ககப்படுமாறு வீசிவிட்டு மாலையில் கரை சேர்ந்த வலைஞர், தம் வரவினேக் கவலேயோடு எதிர்நோக்கி கிற்கும் தம் மனேவியரைக் கண்டு மகிழ்ந்து, ஊக்கம் மிக்கு, இளையரும் முதியருமாகிய எல்லோரும் ஒன்று. சேர்ந்து அவ்வலையினே வருந்தி, பேராரவாரத்திற்கிடையே இழுத்து இழுத்துக் கரைசேர்த்து, வலையில் அகப்பட்டுக் கிடக்கும் மீன்களைப் பிரித்தெடுத்துக் கரையில் குவித்து. ஆங்கு வந்து குழுமி நிற்கும் இரவலர்க்கு அவர் கலம் கிறைய வழங்கி, எஞ்சியவற்றைச் சிறியதும் பெரியதுமாய பல கூறுகளாக்கி விலேகூறிவிற்றுத் தம் தொழில் முடித்த மகிழ்ச்சியாலும் பகலெல்லாம் உழைத்த களேப்பாலும், அக் கரைக்கண் படிந்த மணல் மீதே கிடந்து உறங்குவர் என வலைஞர் தம் அன்ருட வாழ்க்கையினே விளங்க உரைத் துள்ளார். இந்த ஒரு பாட்டிலேயே, பெரிய வலையினே வருந்தி வலிக்கும் வலேஞர் தொழிலுக்கு, உப்புப் பொதியினே ஏற் றிய வண்டி, கடத்தற்கரிய மணல்செறிந்த கிலத்துட்புக்க வழி, அவ்வண்டியினே மண்டியிட்டு வலிந்து இழுத்துச் செல்லும் சிறந்த பெரிய எருதுகளின் தொழிலேயும், பெற்ற மீன்களே இரவலர்க்கு வழங்கும் வலைஞர் கொடைத் தொழிலிற்குக் களத்தில் அடித்துக் குவித்த நெற்குவிய லேக் களம் பாடிவரும் இரவலர்க்குப் பரிசிலாக அளிக்கும் உழவர் செயலேயும் உவமை கூறித் தம் புலமையினேப் புலப் படுத்தியுள்ளார். - "நெடுங்கயிறு வலங்த குறுங்கண் அவ்வலேக் கடல்பாடழிய இனமீன் முகங்து துணைபுணர் உவகையர் பரத மாக்கள் இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி உப்ப்ொய் உமணர் அருந்துறை போக்கும் ஒழுகை நோன்பக டொப்பக் குழீஇ, அயிர்திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப் பெருங்களம் தொகுத்த உழவர் போல இரந்தோர் வறுங்கலம் மல்க வீசிப் பாடுபல அமைத்துக் கொள்ளே சாற்றிக் கோடுயர் திணிமணல் துஞ்சும் துறை." (அகம் : டo.