芒笼 காவல பாவலர்கள் வனபோல் தோன்றியவிடத்தும் அவர்கள்பால் சினவாது, அவர் கூறுவன ஏற்றுப் போற்றிவந்துள்ளனர், "நான் ஒரு பேரரசன்; என்னிடம் இரந்து கிற்கும் புலவணிவன் ; இவன் எனக்குப் புத்தி புகட்டுவதா?' என அவர்கள் எண்ணினால்லர். செவிகைப்பச் சொற் பொறுக்கும் இப்பண்புடைமை கிள்ளி வளவன்பாலும் அமைந்து கிடந்தது : “அரசே! போர்க்களத்தே எதிர்த்துவரும் பகைவர் பெரும்படையைப் பாழ் செய்து பெறும் வெற்றி கின் படைப்பெருமையால் ஆவதன்று அது, நிலத்தை உழுது கெல்விளக்கும் உழவர் திந்த வெற்றியாம் ; ஆகவே, இதை உண்மையில் உணர்ந்தா யாயின், உழவுதொழிலேப் பழித்துரைக்கும் அறிவற்ருேர் கூறுவனவற்றை மேற்கொள்ளாது, ஏர்த்தொழில்: கொண்டு வாழ்வார் தம் இன்னல் போக்கி, அவர் துணை கொண்டு ஏனேக்குடிகளேயும் காப்பாற்றுவதைக் கடமை யாகக் கொள்ளின், கின் பகைவரெல்லாம் நின்னேப் பணிந்து கிற்பர்' "வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப் பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை ஊன்று.சால் மருங்கின் ஈன்றதன் பயனே ; மாரி பொய்ப்பினும், வாரி குன்றி னும், இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும், காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகன் ஞாலம், - அதுகற் கறிந்தனே யாயின், நீயும் நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது, பகடுபுறம் தருகர் பாரம் ஓம்பிக் குடிபுறம் தருகுவை யாயின் கின் அடிபுறம் தருகுவர் அடங்கா தோரே (புறம்: கூடு) என்று தன் எதிரிலேயே ஏர்த்தொழிலைப் போற்றிப் புகழ்ந்தும், தன் தொழிலாம் போர்த்கதாழிலைப் பழித்தும் கின்ற வெள்ளேக்குடி நாகஞர்பால் சினம் கொள்ளாது, அவ்ர் அவ்வறிவுரை கூறுவதற்குக் காரணமாம் அவர் துறையறிந்து, அவர் தம் நிலத்திற்குச் சேர இருந்த இன்ற்க்கடனப் போக்கிச் சிறப்பளித்தான் கிள்ளிவளவின்
பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/59
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை