பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குளமுற்றத்துத் துஞ்கிய கிள்ளிவளவன் 55 இவனைப்பாராட்டினன் எனில் இவன் பெருமைக்கோர் எல்லே யுண்டாமோ? பண்ணன் பேராண்மையும், பெருங் கொடையும் உடையவன் ; சோழநாட்டில் காவிரிக்கரை யில் இருந்த சிறுகுடி என்னும் சிறந்த ஊரின் தலைவன். பாம்பறியும் பாம்பின் கால். வள்ளல் ஒருவன் சிறப்பினே அவன்பால் பரிசில்பெறும் புலவர்கள் பாடுவதில் சிறப் பொன்றும் இல்லே , வள்ளல் ஒருவனே அவனேப்போன்ற பிறிதொரு பெருவள்ளல் பாராட்டுவதே உண்மைச் சிறப் பாம் . அத்தகைய பெருஞ்சிறப்புடையாளன் பண்ணன் , பெருங்கொடைவள்ளல் தலைவனுகிய கிள்ளிவளவன், பண் ணனப் பாராட்டியுள்ளான். - பண்ணன்பால் பரிசில்பெறக் கருதிய பாணன் ஒருவன் அவன் சிறுகுடியை நோக்கிச் செல்கிருன் பண்ணன்பால் பரிசில்பெற்ற இளைஞரும் முதியருமாய பாணர்கள் வேறு வேறு திசைகோக்கி வரிசை வரிசையாகச் செல்கின்ற் காட்சியினையும் காண்கிருன் பழுமரம் ஒன்றில் பழம் உண்ணவந்து கூடிகிற்கும் பறவைகள் எழுப்பும் பேரொலி போல், பண்ணன் அறச்சாலேயில் உணவு பெறுவார் எழுப் பும் ஓசையும் கேட்கலாயிற்று அவன் சிறுகுடி அண்மை யில் உளது என்பதை உணர்த்துகின்றன. இவை ; பாணன் பசிக்கொடுமை இதை உணர்ந்த பின்னரும், வழியில் எதிர்ப்படுவார் ஒவ்வொருவரையும் பண்ணன் சிறுகுடி யாண்டுளது? பண்ணன் சிறுகுடி யாண்டுளது? என மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிற்று. பரிசில் பெற்று மீளும் பானர் சிலரை அண்மி, 'ஐய பசிப்பிணி மருத் துவனம் பண்ணன் இல்லம் யாண்டுளது? அஃது அண் மையில் உளதா? சேய்மைக்கண் உளதா?'என்று கேட்க லாயினன். இந்தக் காட்சியைப் படம்பிடித்தாற்போல் பாடியுள்ளான் கிள்ளிவளவன் : 'யான் வாழும் காளும் பண்ணன் வாழிய! பாணர் காண்க இவன் கடும்பின திடும்பை; யாணர்ப் பழுமரம் புள்ளிமிழ்க் தன்ன ஊண்ஒலி அரவம் தானும் கேட்கும் ;