பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவல பாவலர்கள் பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி முட்டை கெண்டு வற்புலம் சேரும் சிறுதுண் எறும்பின் சில்லொழுக் கேய்ப்பச், சோறுடைக் கையர், வீறுவி மியங்கும் இருங்கிளைச் சிரு அர்க் காண்டும்; கண்டும் மற்றும் மற்றும் வினவுதும் தெற்றெனப் பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ: சேய்த்தோ கூறுமின் எமக்கே’’ (புறம்: க.எக.) இந்தச் சிறு பாட்டில், பண்ணன் அறச்சாலையில் அழும் ஒலிக்கு, பழுமரம் சேர்ந்த புள்ளினங்கள் எழுப்பும் பேரொலியினையும், அறச்சாலேயினின்றும் உணவுபெற்று மீளும் பாணர்கள் வரிசைவரிசையாகச் செல்லும் செல விற்கு, மழைவரும் என அறிந்து முட்டைகளே ஏந்திக் கொண்டு மேட்டுநிலம் நாடி வரிசைவரிசையாகச் செல்லும் எறும்புகளின் செலவையும் உவமைகூறிய அழகும், எறும்பு முட்டைகொண்டு திட்டை ஏறின் தப்பாது மழை பெய்யும் என்ற உண்மைஉரையினை எடுத்தாளும் சிறப்பும், பாணர்க்குப் பரிசில் அளித்து அவர் பசிபோக்கித் துணே புரியும் பண்ணனைப் பசிப்பிணி மருத்துவன்' எனப் பெய ரிட்டுப் பாராட்டும் பெருமையும், அவன் புலமைகலக் தின் பண்புகளாம்.