பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக. கோப்பெருஞ் சோழன் பழந்தமிழ்ப் புலவர்கள், பாராண்ட அரசர்கள் பல ரைப் பாராட்டியுள்ளனர்; அக்கால அரசர்கள், அப்புல வர்கள் பாராட்டைப் பெறுதற்குப் பெற்றிருந்த குணங்கள் கொடையும், கொற்றமுமேயாம். பாடிய புலவர் ஒவ்வொரு வரும், தாம் பாராட்டிய அரசர்கள்பால் அமைந்திருந்த இவ்விருபெரும் சிறப்புக்களேயே பாராட்டியுள்ளனர். ஒருவன் கொடைக்குணம் கண்டு பாராட்டினர்; ஒருவன் வெற்றிகண்டு பாராட்டினர் என்பதால், பாராட்டைப் பெற்ருர் தம் உண்மைப் பெருமையினே உணர்தல் இயலாது; கொடுத்தர்ன் எனப் பாராட்டுதல், செய்ந்நன்றி அறிதலாம்; கொடுப்பான் எனப் பாராட்டுதல், குறியெதிர்ப்பை ரே துடைத்து: அஃதாவது ஒன்றை எதிர்நோக்கி: ஆதலின் அத்தகைய பாராட்டு உண்மைப் பாராட்டாகாது; இதல்ை அப்பாராட்டைப் பெற்ருர்தம் உண்மைப்பெருமை உரு வாகாது; அதைப்போன்றே, ஒருவன் கொற்றம்கண்டு பாராட்டுவதும் ஆம், அஃது அவன்பால் உள்ள கொற்றம் கண்டு தோன்றிய அச்சம் காரணமாகவும் இருத்தல் கூடும்; ஆதலின் அதுவும் உண்மைப் பாராட்டாகாது. புலவர் பலர்தம் பாராட்டைப்பெற்ற கோப்பெருஞ் சோழன், அப்பாராட்டைப் பெறுதற்குப் பெற்றிருந்த குணங்கள் மேற்கூறியன அல்ல; கோப்பெருஞ் சோழனேப் பாராட்டியோர், அவன் கொடையின் பெருமை கண்டோ, அல்லது அவன் கொற்றத்தின் திறங்கொண்டோ பாராட் டிரைல்லர்; அவன்பால் அமைந்திருந்த, இளிவரின் வாழாத மானம் உடைமையும், புணர்ச்சியும், பழகுதலும் இன்றி, உணர்ச்சியொன்றிய நட்புடைமையும் கண்டே பாராட்டி யுள்ளனர்; ஆதலின் அப்புலவர் பாராட்டும் பாராட்டு உண்மைப் பாராட்டாம்; புலவர்தம் உண்மைப் பாராட் டைப்பெறும் உயர் புகழ் கொண்டவன் கோப்பெருஞ் சோழன் ஒருவனே. பழந்தமிழ் அரசர்கள் பெருக மற்றெரு சிறப்பும் அவன்பால் உண்டு. ஒர் அரசன் உயிர் துறந்தான்; அவன்