பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோப்பெருஞ் சோழன் 59% கோப்பெருஞ்சோழனின் திருந்திய பண்பாடுடைமை யினே அவன் பாடிய மற்ருெரு பாட்டு விளக்கி கிற்கிறது: பொருள் தேடுங்கால், அப்பொருள் பெறும்வழி அறநெறிப் பட்டதாக இருத்தல்வேண்டும்; பொருள் செய்வார் தம் உள்ளத்தில் கிலவவேண்டிய மக்கட் பண்புகளாகிய அன் பையும் அருளேயும் அறவே ஒழித்துவிட்டு, பொருள் ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ளுதல் கூடாது; பொருள் வரும்வழி, அன்பு நெறியோடும், அருள் நெறி யோடும் மாறுபடுதல் கூடாது; 'அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார்; புரள விடல்” - (திருக்:எடுடு): எனக் கூறுவர் பெரியோர். இந்தப் பண்பாட்டுள்ளம் கோப்பெருஞ் சோழன்பாலும் குடிகொண்டிருக்கக் காண் கிருேம். தலேவன் பொருள்வயின் பிரியக் கருதுகிருன் எனக் கூறினுள் தோழி; அதற்குத் தலைமகள் "தோழி!' அருளேயும் அன்பையும் அறவே மறந்துவிட்டுப் பொருள் வயின்பிரிதல் அற உள்ளம் உடையார்க்கு இயலாது; அத்தகைய உள்ள உரம் அவர்க்கு இராது அருளும், அன்பும் அற்று உரம்பெற்ற உள்ளமுடையோர்க்கே அஃது இயலும், தலைவர்க்கு அத்தகைய உள்ளஉரம் இராது என எண்ணுகின்றேன்; அவர்க்கு அத்தகைய உரம், ஆற்றல் உண்டாயின், அவர் அன்பும், அருளும் அற்றவராயின் பொருள்வயின் பிரிக' எனக் கூறினுள் எனக் கூறும் இக்கூற்றில் கோப்பெரும் சோழனர் தம் உள்ளம் தோன்றுதல் காண்க: 'அருளும் அன்பும் நீக்கித் துணேதுறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோ ராயின் உரவோர் உரவோ ராக' (குறுங்:20): இத்தகைய சிறந்த பண்பாடு உடையவனகிய கோப் பெருஞ்சோழன், புல்லாற்றுார் எயிற்றியனர் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனர், பொத்தியார் போன்ற புலவர் பெருமக்கள் போற்ற உறையூர்க்கண், நாடாண் டிருந்தனன். அப்போது பாண்டிகாட்டில் பிசிர் என்னும்