பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோப்பெருஞ் சோழன் 6竇 கோப்பெருஞ் சோழனப் போன்றே பிசிராங்தை யாரும், கோப்பெருஞ் சோழன் புகழ்பாடுவதையே தம் பண் பாகக்கொண்டிருந்தார்; ஒருநாள் மாலைக்காலத்தே தெற்கி லிருந்து வடக்குநோக்கிப் பறந்து செல்லும் அன்னப் புட்கள் சிலவற்றைக் கண்டார்; அவை குமரியாற்றில் இரைதேர்ந்துண்டு இமயம் சென்று உறங்குவபோலும் என்று எண்ணினர். அவ்வெண்ணத்தைத் தொடர்ந்து, இமயம் செல்வவாயின் இடையில் உள்ள சோழ நாட்டைக் கடக்கன்ருே செல்ல வேண்டும் என்று எண்ணினர்; உடனே, சோழநாட்டுத் தலைநகர் உறையூரும், ஆண்டிருக் கும் அரசன் பெருங் கோயிலும், அதில் இனிது உறையும் தம் கண்பன் கோப்பெருஞ் சோழனும் அவர் மனக்கண் முன்வந்து கின்றனர்; அக்காட்சியினக் கண்ட ஆங்தையார், பறந்து செல்லும் சேவல் அன்னம் ஒன்றை விளித்து, "ஏ! அன்னச் சேவல் கின் மனேவி நல்ல அணிபல அணிந்து அழகுற்றுத் தோன்றுவதை விரும்புவாயன்றே அம்ை வாருயின், யான் கூறுவன கேள்: இமயம் கோக்கிக் செல்லும் வழியில் உறையூரில் என் கண்டன் கோப்பெருஞ் சோழன்பால் கேரே சென்று, 'நான் ஆந்தையர்பால் அன் புடையேன் என்று கூறின், கின் அன்புடைய மனேவி யணியுமாறு தன் அழகிய அணிகள் அத்தனையும். அளிப்பன்; அவனேக் கண்டு செல்கின்றனே யா' என்று. பாடுவாராயினர். “ ங்தையார், இவ்வாறு எப்பொழுதும் கோப்பெருஞ்: சோழன், கோப்பெருஞ்சோழன்' என்று கூறிக்கொண்டே யிருப்பதைக் கண்ட அவர் நண்பர்கள், 'கின் கோப்பெருஞ்: சோழன் யாவன் அவனுறையும் இடம் யாது? அவன் இயல்புகள் யாவை' என்றெல்லாம் கேட்கலாயினர்: அதற்கு அவர், "என் கலேவன் உறையூரை வாழ்விடமாகக் கொண்டவன்; கோப்பெருஞ் சோழன் எனும் பெயருட்ை யான்; சிறந்த நண்பனுகிய பொத்தியார் என்ற புலவ. ரோடு கூடி மகிழ்ந்துறையும் இயல்புடையான்' என்று: விடைகூறும் வாய்பாட்டான் சோழன் புகழ்பாராட்டி வாழ்வாராயினர், - .