பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோப்பெருஞ் சோழன் 68. பொருந்துவதன்று," என்று நயம்படக் கூறினர் புலவர் தம் அறிவுரை கேட்ட அரசன் போரொழித்து மீண் .Ꮬ. {Ꮁ6ar , • r மக்கள் செயலால் மன்னன் மனம் குன்றின்ை, *மானம் இழந்தபின் வாழாமை முன்னினிதே' என்று எண்ணினன் சோழன்பால் அவன் மக்களே படை கொண்டு வென்றனர் என்ற பழிச்சொல் ஏனேப் பகை வேந்தர்களாகிய சேர, பாண்டியர் செவி புகுமுன்னரே உலக வாழ்வினின்றும் விடைபெற்றுக்கொள்ள விரும்பி ன்ை வடக்கிருந்து உயிர்துறக்கத் துணிந்தான்; தன் உள்ளக்கருத்தினத் தன் புலவ கண்பர்களுக்கு உணர்த்த விரும்பி, அவர்களே அன்புடன் அழைத்து, 'அறிவுடைப் பெரியீர்! யானவேட்டை மேற்கொண்டு சென்றவன், தன் வேட்டம் வாய்க்க, யானேயோடு வருதலேயும், சிறு பறவை வேட்டைமேற்கொண்டு சென்ருேன், பறவை எதுவும் கிடைக்கப்பெருமல் வறிதே மீள்வதையும் உலகில் காண்கிருேம் உள்ளுவ எல்லாம் உயர்வுடையவே உள்ளும் நல்லோர்க்கு ஆகூழ் உண்டாயின், அவர் உம்பர் உலகம் புக்கு அவ்வுலக இன்பத்தை நுகர்தலும், அவ்வும்பர் உலகத்தினும் மேலாம் வீட்டுலகடைந்து பிறவாப் பெரு நெறி அடைதலும் உண்டு; அத்தகைய பேரின்பகிலே உருதுபோயினும், உலகுள்ளளவும் நிற்கும் உயர்ந்த புகழ் பெறுதல் உறுதி. ஆகவே, கல்வினையினே எண்ணிய போதே செய்வர் அறிவுடையோர்; அறிவில்லாதவரே, கல்வினே செய்யவேண்டுமா? செய்வதாயின் இன்றே இசய்யவேண்டுமா? இன்னும் சின்னட்கழித்துச் செய்த |லாகாதா? கல்வினே சிறிதுசெய்தால் ப்ோதாதா? செய்வன எல்லாம் கல்வினையாகவே இருத்தல்வேண்டுமா? என்றெல் லாம் ஐயப்பாடுற்று அவற்றில் தெளிவேதும் பெறமாட் டாமல் வருந்துவர்; யான் அத்தகைய தெளிவிலா அறி வுடையே னல்லேன். ஆகவே வடக்கிருந்து உயிர் விடலாம் கல்வினையினே இன்றே மேற்கொள்ளத் துணிந்து விட்டேன்," என்று கூறினன்.