பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 காவல பாவலர்கள் இறந்த அரசனேயும், புலவர்களேயும் கினேந்து கினேந்து புலம்பிப் போற்றிக்கொண்டே சின்னுட்கள் வாழ்ந்து, மனேவி மகப் பெற்றவுடனே, அவ்வாற்றிடைக்குறை யடைந்து சோழன் வடக்கிருந்து உயிர்துறந்த இடத்திற்கு அணித்தே தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தார். அரசனுய், அறிவுடைப்புலவனுய், மர்னம் கிறை மகனுய் வாழ்ந்த கோப்பெருஞ் சோழன், நண்பர் உலகிற் கோர் எடுத்துக்காட்டாய் விளங்கினன்; உள்ளம் ஒத்தவர் களிடையே நட்புத் தோன்றி வளர்தற்கு, ஒரு நாட்டிற் பிறந்து, ஒர் ஊரில் வாழ்ந்து புணர்ச்சியும் பழகுதலும் வேண்டுவதில்லை என்ற உண்மையினே விளக்குவதற்கு ஏற்றதேர்ர் எடுத்துக்காட்டாக, நம் சோழர் பெருந்தகைக் கும், அவர் ஆருயிர் நண்பர் பிசிராந்தையார்க்கும் இடையே தோன்றி வளர்ந்த நட்பையே மேற்கொள்வர். புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் கட்டாம் கிழமை தரும்” (திருக்:எஅடு} என்ற குறட்பாவிற்கு உரை எழுதிய ஆசிரியர் பரிமே லழகர் (புணர்ச்சி, பழகுதல் ஆகிய) இவ்விரண்டு மின்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராங்தையார்க்கும் போல உணர்ச்சி யொப்பின் அதுவே உடனுயிர் நீங்கு முரிமைத்தாய நட்பினேப் பயக்கு மென்பதாம்,' எனக் கூஅவதும் காண்க.