பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஉ. நலங்கிள்ளி திருமாவளவனல் ஆக்கப்பெற்று, மணிமேகலை கூறும் கிள்ளிவளவன் காலத்தே அழிவுற்ற புகார்ப்பெருநகரை, அஃது அழிவுறுதற்குச் சில ஆண்டுகளுக்குமுன், தலோக ாாகக் கொண்டு சோணுடாண்ட அரசர்களுள் சிறந்தோன், நலங்கிள்ளி எனும் கல்லோனவ்ன். அவன் நாடு, கலம் செல்லலாம் தகுதிமிக்க பேராறு ஒன்று கடலோடு கலக் கும் ஒர் இடத்தைத் தலைநகராகக் கொண்டது என்று உறையூர் முதுகண்ணன் சாத்தனர் என்பார் கூறியுள்ளார்; பாயை மாற்ருமலும், ஏற்றிய பாரத்தைக் குறைக்காமலும் ஆற்று முகத்தே புகவல்ல பெரிய மரக்கலங்கள் தந்த கடற்செல்வம் கொண்ட நாடுடையோன். - 'கூம்பொடு மீப்பாய் களேயாது மிசைப்பரங் தோண்டாது புகாஅர்ப் புகுந்த - பெருங்கலம்...சொரியும் கடற்பஃருரத்த நாடுகிழவோய்” என்று அவர் கூறுவது காண்க. ஆலத்தார்கிழார், உறையூர் முதுகண்ணன் சாத்தனர் கோவூர்கிழார் என்ற முப்பெரும் புலவர்கள் கலங்கிள்ளி யைப் பாராட்டியுள்ளனர்; இவர்களுள் ஆலத்துார்கிழார், அவன் இறந்தபின்னரும் இருந்து பிரிவாற்ருது இரங்கிப் பாடியவராவர்; கலங்கிள்ளியின் பாக்களும், அவனப் பாராட்டிய புலவர்கள் அளித்த பாக்களும் கலங்கிள்ளி யின் நற்பண்புகள் பலவற்றை நன்கு எடுத்துக் காட்டுகின் றன; புலவர்கள் மூவரும் கலங்கிள்ளியின் கொற்றம், கொடை, பிறபண்பு முதலாயின. கண்டு பாராட்டி யுள்ளனர். . - உறையூர் முதுகண்ணன் சாத்தனர், பகைவர் நாடு கோக்கிச் செல்லும் அவன் படை, வழியில் பனந்தோப்பு ஒன்றினூடே சென்றவழி, படையின் முன்வரிசையில் வரு வார் பனேயின் நுங்கினே உண்பர்; படைவரிசையின் இடைப்பகுதி ஆண்டு வருங்கால், அப்பன முற்றிப்பழுத்து