பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நலங்கிள்ளி 69 யும் கைப்பற்றிப் பாணர்க்குப் பரிசளிக்கும் பேராற்றலன் ; பாண்டி நாட்டின்கண் இருந்த ஏழு அரண்களே அழித்து, அவற்றின் வாயிற்கதவுகளில் தன் வெற்றிக்கறிகுறியாகப் புலி பொறித்தான் என்று பாராட்டியுள்ளனர். நலங்கிள்ளியின் கொற்றத்தை இவ்வாறு பொதுகிலே யில் பாராட்டிய புலவர்கள், சேர நாட்டிலும், பாண்டி நாட் டிலும், வடபுலத்திலும் இவன் பகையாய் வாழ்ந்தோர் யாவர் என்பதைத் தெளிவாக உணர்த்தினால்லர், சோழ நாட்டில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்பற்றிய வரலாறு மட்டும் சிறிது விரிவாக உணர்த்தப்பட்டுளது ; கலங்கிள் வளிக்கும், அவன் தாயத்தாளுகிய உறையூர் நெடுங்கிள்ளிக் கும் இடையில் நடைபெற்ற போர்களைப் புலவர் கோவூர் கிழார் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். கலங்கிள்ளிக் கும் நெடுங்கிள்ளிக்கும் இடையில் ஏனே பகை வளர்ந்து விட்டது . கலங்கிள்ளிபால் பரிசில்பெற்றுத் தன்டாலும் பரிசில்பெறும் எண்ணங்கொண்டு தன் தலைநக்ராம் உறை யூர் வந்த இளந்தத்தன் என்ற புலவனே, அவன் தன் பகை வன் ஊரினின்றும் வந்துளான் என்ற காரணத்தினுலேயே பகைவன் ஒற்றன் எனக்கொண்டு கொல்லப் புகுந்தான் எனில் அவ்விருவர்க்கும் இடையில் இருந்த பகைக் கொடுமையினே என்னென்பது ? நெடுங்கிள்ளி ஆஆர்க் கோட்டையினுள் உளன் என அறிந்து அதை முற்றுகை யிட்டுக் கைப்பற்றிய நலங்கிள்ளி, அவன் உறையூர்க் கோட்டையினுள் ஒளிந்துகொண்டதறிந்து ஆண்டும் விடாது சென்று முற்றினன் என்ற வரலாற்றினேக் கோவூர்கிழார் அறிவிப்பர். வெற்றிமிகு வேந்தனய் விளங்கிய கலங்கிள்ளி, கொடைச் சிறப்புமிக்க கொற்றவனுகவும் விளங்கினன் : தன் கண் வந்து இரந்து பொருள் பெற்ருர், மீண்டும் மற் ருெரு தலைவனத் தேடிச்சென்று இரக்க வேண்டிய கிலே உண்டாகாவ்ாறு மிக்கபொருள் அளிக்கும் கொடைக்குண முடையவன். - - "பிறன்கடை மறப்ப நல்குவன்." ) pزنده : ف