பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 காவல பாவலர்கள் இந்த உண்மையை உணர்ந்தவர்கள் தமிழரசர்கள்; அதல்ை, அவர்கள், தங்கள்பால் வந்து இரந்து கிற்கும் எளிய வாழ்க்கையினேயுடைய புலவர்களே, அவர்கள் இன்ம்ைகிலே குறித்து எள்ளி இகழாது, அவர்கூறும் பொருளுரைகளைப் பொன்னேபோல் போற்றி வந்தனர். 'அரசனே எல்லாம்'; 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" "அரசன் வாழ்வு, குடிகளின் வாழ்வு: அவன் தாழ்வு, அவர்கள் தாழ்வு” என்ற கிலேயிலிருந்த காலத்தில், உலகத்தின் உயிர் எனத் தகும் உயரிய கிலே பெற்றுள்ள அரசன், தான் அரசாள் அறிவினேப் பெருளுய், எதற்கும் அறிவுடையாரையே எதிர்நோக்க வேண்டியவ ஞயின், அவ்வுலகிற்கு அழிவு நெடிதுநாள் இராது ; ஆதலின் அரசன் அறிவுடையோர் துணைபெறுதற்கு மாருகத், தானே அவ்வறிவுடையயிைன், அவன் ஆளும் நாட்டிற்கு அழிவு அரிதாம். ஆதலின், தமிழர்கள் தங்கள் அரசன் அத்தகைய அறிவுடையோளுதலே விரும்பினர் : அவர்கள் விரும்பியாங்கே, தமிழரசர்களும் அறிவு கிறைந்த புலவர் பெருமக்களாய் உலகம் போற்ற ஊராண்டிருந்தனர் : தமிழரசர்கள் கல்வியின் பெருமையுணர்ந்து அதைப் போற்றியுள்ளனர்; பொருளின் சிறப்புணர்ந்து, அதை நல்வழியில் ஈட்டி, அறவழியில் செலவழிக்கவேண்டும் என உணர்ந்திருந்தனர்; நாடாள் முறை இது நாடாள்வோன் தகுதி இது; குடிமக்களின் ஆற்றல் இது அவர்க்குக் கேடு விளேத்தலால் தமக்கு உண்டாம் அழிவு இது என்று உணர்ந்திருந்தனர். மானத்தின் பெருமையினையும், அம் மானம் இழந்தவழி வாழாமையால் வரும் உயர்வையும் உணர்ந்திருந்தனர்; சுருங்கக்கூறின் அக்கால் அரசர்கள் அறியவேண்டுவனவெல்லாம் அறிந்திருந்தனர். அத்தகைய அறிவுபெற்ற அரசர்களாய், பரவல்ல காவலராய் இருந்தாரைத் தொகுத்துக்கூறி, அவர்கள் அறிந்த அறிவு கலங்கள் இவை அதல்ை அக்காலத் தமிழர்கள் பெற்ற பெரும்பயன் இது என எடுத்துக்காட்டு வதே இச்சிறு நூல். அரசராய்ப் பிறந்து புலவராய்