பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஎ. ஆரியப்பண்ட கடந்த நெடுஞ்செழியன் அரசன் அவை அடைந்து கணவன் கள்வனல்லன் என்பதைக் கண்ணெதிர் காட்டிகிறுவ முன்வந்த கண்ணகி, தன் காற்சிலம்பினே உடை த்தாளாக, அதனுள்ளிருந்த மாணிக்கப்பரல் தன் வாயிற்பட்டுத் தெறித்ததுகண்டு, 'பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானே அரசன்! யானே கள்வன், மன்பதை காக்கும் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது; கெடுக என்.ஆயுள்' (சிலப். உ0: எச எ) என்றுரைத்து, உரைத்த அவ்வளவிலேயே அவ்வரசு கட்டிலிலேயே வீழ்ந்துயிர் துறந்து, தீவினையால் வளைந்த கோலே உயிர் துறத்தலால் நிமிர்த்திய பாண்டிய அரசனே ஆரியப் படை கடந்த கெடுஞ்செழியனவன். தவறுசெய்து வாழாத் தறுகண்மை உடையயை இவன் மனேவியும், 'கணவனே இழந்தோர்க்குக் காட்டுவ தில்’ என்ற கழிபெருங் கற்புடையளாய்க் கணவன் இறந்த ஆண்டே, தன் உயிர் கொண்டு.அவன் உயிர்தே டினள்போல்' உடன் உயிர்விட்டு மாண்புற்ருள். பாண்டியர் பகைவர் மரபிலே வ்ந்த செங்குட்டுவனே, "தான் செய்த தவறு, தன்போலும் வேந்தர் செவியுள் சென்று புகாமுன்னரே, இறந்து, இறவாநிலைபெற்ற செழியன் செங்கோற் சிறப்பே சிறப்பு! தன் அறியாமையால் அழிந்த அறத்தைத் தன் உயிர்கொடுத்து உயிர்ப்பித்த அவ்வுரவோன் புகழே புகழ்!” எனப் போற்றுவனுயின் செழியன் சிறப்பினே என்னெனப் புகழ்வது ! 'எம்மோ ரன்ன வேந்தர்க் குற்ற செம்மையின் இகந்தசொல் செவிப்புலம் படாமுன்