பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-காவல பாவலர்கள்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகவே கற்றல் நன்று' என்று அறிவுரை கூறும் அப்பணி யினத் தானே மேற்கொண்டான். அவன் புரிந்த பணி அழகிய பாட்டாய் அமைந்து விட்டமையால் அஃது அவன் கால மக்களுக்கும், அவன் நாட்டு மக்களுக்குமேயல்லாமல், எக்கால மக்களுக்கும், எங்காட்டு மக்களுக்கும் பயன்படும் கிலேத்த துணேயாய்கின்று விளங்குகிறது. 'தன் வயிற்றிற் பிறந்த மக்கள் அனேவர்பாலும் ஒத்த அன்பே காட்டும் இயல்பினள் தாய் என்ப. அத்தகைய தாயும் தன் மக்களிடையே காணும் கல்வியின் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப அவர்கள்பால் தான் காட்டும் அன்பிலும் ஏற்றத்தாழ்வு காட்டுவள். ஒரு குடியிற். பிறந்தார் பலராயினும், அவருள் மூத்தோன் கல்வி கல்லாதவனுகவும், இளையோன் கற்ருேளுகவும் காட்சி தரின், மூத்தோனே வா' என்றழைக்கவும் நானும் இவ் வுலக மக்கள், கற்ற அவனிளேயோன் ஆட்டும் சுட்டுவிரல் கண்டே ஆட முன்வருவர். மக்களைப் பிறப்பால் நால்வகை யினராக்கி, ஒருவர் பிறப்பினலேயே உயர்ந்தவர் ; ஒருவர் பிறப்பினலேயே இழிந்தவர் என்று கூறும் சில அற அநூல்கள். ஆனால், மேற்குலத்தில் பிறந்தான் கல்லாதவ யுைம், இழிகுலத்தில் பிறந்தான் கற்றவனயும் காணப் படின், கற்ற இழிகுலத்தான் காலின்கீழ்க் கல்லாத மேற். குலத்தான் வீழ்ந்துகிடப்பன். ஆகவே, ஒருவன் உயர் விற்கும் தாழ்விற்கும் காரணம் பிறப்பன்று ; அவன் பால் காணப்படும் கல்வி, கல்லாமைகளே அதற்குக் காரணமாம். ஆகவே, ஒவ்வொருவரும் கற்றல்வேண்டும்,” என்று கல்வியின் இன்றியமையாமையினே எடுத்துக் காட்டிப் பின்னர்க் கற்கும் முறைபற்றிக் கூறுவார், கல்வியைக் காசுகொடுத்துப் பெறல் முடியாது ஆணேயிட்டும் அடிமை கொள்ளல் இயலாது ; கல்வியையுடையோர் அதை விரும் பிக் கொடுத்தாலன்றி அதைப் பெறுதல் எவர்க்கும் அரி தாம். ஆகவே, கல்வியைப் பெறவிரும்புவோர். அதுை வேண்டுமளவு கொடுக்கும் நல்லுள்ளம் கல்விதரும் ஆசிரி யர்க்கு உண்டாமாறு ஆக்குதல்வேண்டும். உள்ளம், அடிக்