பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ0. கொடியூர்கிழார் மகனுர் நெய்தல்தத்தனுர் தத்தனர் என்ற இயற்பெயருடைய இவர் நெய்தல் திணையைப் பாடிய சிறப்பால் நெய்தல்தத்தனர் என அழைக்கப்பெற்ருர்; இவர் கங்தையார் கொடியூரிற் பிறந்து அரசரால் கிழார் என்ற சிறப்புப்பெயர்பெற்ற மூதறி வின் ராவர். - பரத்தியர் அலைகொண்டு வந்த கொழித்த பால் போலும் தூய மணல்மேட்டில் ஆடி மகிழ்வர்; முடியிட்ட் வலையால் பற்றப்பெற்ற இருல்மீன்களைப் பகல்பொழுது போம்வரை காத்துக்கிடப்பர் ; பரதவர் சுருபோன்ற பெருமீன்கள் கிடைக்கப்பெற்ருல் அம்மகிழ்ச்சியால் சின்னுள் வரை வேட்டைமேற் செல்வதைவிட்டு, வீட்டுள் உறங்கிக் கிடப்பர் : அப்பரதவர் முன்றில் புன்னேமலரின் மணமும், காழையின் மணமும் கலந்து மணக்கும் என நெய்தல்கிலத்தின் இயல்பினே நன்கு எடுத்துப்பாடி, நெய்த லேப்பாடவல்லவர் என்பதை (தற் : சசு.) நாட்டியுள்ளார். தனித்திருக்கும் தலைவியின் இயல்பினே விளக்கும் நெய்தல் பாடவல்ல தத்தனர், பிரிவே பொருளாகக் கொண்ட பாலையும் பாடவல்லராவர். அவர் பாட்டின் பொருளாழத்தை உணர்க. கடிதுவர் திறத்த் கண்ணில் வாடை நெடிவங் தனையென நில்லா தேகி பலபுலங் துறையும் துணையில் வாழ்க்கை ாம்வலத் தன்மை கூறி அவர்கிலே அறியும் ஆயின் நன்றுமன் தில்ல பனிவார் கண்ணேம் ஆகி இனியது நமக்கே எவ்வம் ஆகின்று அனைத்தால் தோழிநம் தொல்வினைப் பயனே.” - . . . (அகம்: உசங்)