பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. கிழார்ப் பெயர்பெ ற்ருேர் அக்கால வழக்கமாம். ஒருகுடியிற் பிறந்தார், பிறகுடியிற் பிறந்தாரோடு பகைத்து வாழ்தலோடு கின் ருரல்லர் ; ஒரு குடியிற் பிறந்தவர்களே ஒருவரோடொருவர் பகைத்துப் போர் மேற்கொள்வர் ; அம்மட்டோ ? கந்தை மகனே எதிர்ப்பன் ; மகன் தந்தைமேல் போருக்கு எழுவன்; இதுதான் பழைய தமிழகத்தின் அரசியல் நெறி. இவ்வரசியல் முறையால் தமிழகம் முழுதும் அழிந்து மண்ணுேடு மண்ணுய் மறைந்து போகாமல், கமிழகம் என்ற பெயரால் இன்னும் ஒரு நாடு உளது என்ற இந் நிலைக்குக் கோஆர்கிழார் போன்ற புலவர்களே காான மாவர்; அவர் போன்ற புலவர் பலர், பாடிப் பிழைப்பதே தம் தொழில் என்று அடங்கியிாராய், அக்கால அரசர்கள் நெறிதவறுந்தோறும், அஞ்சாதமுன்வந்து, ஏற்ற வகையில் இடித்துக்கூறித் திருத்தியதினலேயே கமிழொலி கேட்கும் நாடு ஒன்று உலகின் ஒரு பகுதியாகத் திகழ்கின்றது; வாழ்க அப்புலவர் பெருமக்கள். தமிழகத்தில் மருதவளம் சான்ற மாண்புடையது சோழநாடாகும் ; அந்நாடு காவிரியாற்றுப் பாய்ச்சலால் பலவளம் கொழிக்கத் திகழ்ந்தது. “ சோழநாட்டு நன் செங்கள், நெற்பயிருக்கு வேலிபோல் வளர்ந்திருக்கும் கரும்புகள் கின்ற பாத்திகளில் மலர்க்க பல நிறமலர்களின் மணம் காறும் , முல்லைகிலமாம் மேட்டுகிலங்கள், புல் மேயும் பல்வகை ஆனிரைகளோடு, அவற்றிற்குக் காவலாய் அமைந்த வில்வீரர் உறையும் பல அரண்களைக் கொண்டி ருக்கும்; கெய்தல் நிலப் பகுதிகள், காற்று இயக்க இயங்கிக் கரை சேர்ந்த கலன்களே எண்ணிக் கணக்கிடும் எழில் மி மகளிர், நிழல் கருதியிருக்கும் கானற் சோலைகளைக் கொண்டிருக்கும் , கழியிடை ஊர்கள், வெள்ளுப்பினே, உள்நாடுகளிலும் சென்று விற்கும் உப்புவணிகராம் உமணர் வாழ்க்கையால் வளமுற்றுத் திகழும் ” எனத் தாம் கண்ட சோழநாட்டு வளத்தைப் புலவர் கோவூர் கிழார் போற்றிப் புகழ்வது காண்க :