பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவூர் கிழார் 97 'வயலே, நெல்லின்வேலி டிேய கரும்பின் பாத்திப் பன்மலர்ப் பூத்ததும் பின்று , புறவே, புல்லருந்து பல்லாயத்தான் வில்லிருந்த வெங்குறும் பின்று : கடலே, கால்தந்த கலன் எண்ணுவோர் கானற் புன்னைச் சினைய?லக்குந்து ; கழியே, சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றிப் - பெருங்கல் சன்னுட்டு உமண் ஒலிக்குந்து.’ (புறம் : க.அன்) இத்துணேவளம் செறிந்த சோளு,ே கோஆர்கிழார் காலத்தே இருநாடுகளாகப் பிரிவுண்டு, அம்மாபைச்சேர்ந்த வேறு இரு கிளேயினரால் ஆளப்பட்டு வந்தது. புகாரைத் தலைநகராகக் கொண்ட கடற்கரையை ஒட்டிய நாட்டை ஒருவரும், உறையூரைத் தலைநகராகக் கொண்ட உள் நாட்டை வேறு ஒரு திறத்தாரும் ஆளலாயினர். கோவூர் கிழார் சோனடு நோக்கிப்போங்கால், உறையூரில் கிள்ளி வளவன் என்பவன் அரசாண்டிருந்தனன். கிள்ளிவளவன், புலவன், புரவலன், புலவர்போற்றும் பண்பாளன், பொரு பகை அஞ்சாப் போர்வல்லான் என்பன எல்லாம் ஆலத்துர் கிழார், ஆவூர் மூலங்கிழார் வரலாறு உரைத்தவழி விளங்க உணர்த்தப்பட்டுளது. புலவர் பலர் போற்ற வாழ்ந்த வள்வனைத் தாமும் சென்று பாராட்ட விரும்பினர்; அவ்வாறே சென்றும் கண்டார்; புலமிக்கவரைப் புலமை தெரிதல் புலமிக்கவர்க்கே புலனம்’ என்ப. கோவூர் கிழாரின் புலமைப்பெருமையினேப் புலமை மிக்கோளுகிய வளவன் உணர்ந்தான்; அவர் உவக்கும்வகை உணவு முதலாயின அளித்துச் சிறப்பித்தான்; அவன் தமக்களித்த வரவேற்புவிருத்தினே வாழ்த்திக்கூறிய புலவர் நல்லுரைகள் பொன்னுரைகளாம் : - பெரிய ர்ேகிலையில் பெய்த மழைநீர் துள்ளித் தெறித்தலே போல், நெய் துள்ளத்துள்ள வறுக்கப்பட்ட வறுவல்களையும், சூட்டுக்கோலால் கிழித்துச் சுடப்பட்ட ஊனேயும், மண்டையோடு கிறைய வார்த்த பாலேயும் சுடச்சுட உண்டு வியர்த்தலல்லது, வேலைசெய்து வியர்க்கா கி. பெ.-7