பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'98 கிழார்ப் பெயர்பெற்ருேர் வண்ணம் வேண்டுவ எல்லாம் எமக்களித்துப் புகழை எல்லாம் தனதாக்கிக்கொள்ளும் குணமுடையான் கிள்ளிவளவன். வளவன் வண்மை கண்டளித்த வாழ்த் அரை இது : நெடுநீர் கிறைகயத்துப் படுமாரித் துளிபோல நெய்துள்ளிய வறைமுகக்கவும், சூடுகிழித்து வான்ே மிசையவும், ஊன்கொண்ட வெண்மண்டை ஆன்பயத்தான் முற்றழிப்பவும், வெய்துண்ட வியர்ப்பல்லது, செய்தொழிலான் வியர்ப்பறியாமை ஈத்தோன் எந்தை இசை தனதாக.’ (புறம் : க.அசு) கோஆர்கிழார், கிள்ளிவளவன் கரும் கொடைப் பொருள் ஒன்றே கருதி வந்தவரல்லர்; அவன் கொற்றம் காணவும் வந்தவராவர்; ஆதலின், அவன்பால் தாம் கண்ட வெற்றிச் சிறப்புக்களையும் விளங்க உரைத்துள்ளார். உயிர்களைக் கொல்வதே தொழிலாகக் கொண்ட கூற்றுவனும், தான் விரும்பியாங்கு, விரும்பியபோதே, விரும்பிய உயிர்களைக் கொல்லான்; அவ்வுயிர்களைக் கொல்லுதற்காம் காலம் பார்த்தே கொல்வன் ; ஆனல் கிள்ளிவளவனே, அவ்வாறு காலம் எதையும் பாராளுய், தான் அழிக்க விரும்பிய பகைவர்களைத் தான் வேண்டிய வாறு, வேண்டிய இடத்திலேயே அழிக்கும் கொடியனுவன்; ஆதலின், கிள்ளிவளவன் பகைபெற்ற நாட்டில்வாழ் அரச ரும் வீரரும், தம் மக்களைப் பிரிந்து மாளவேண்டுமே என்ற எண்ணத்தால், அம்மக்களை வாரியெடுத்து வாய்நிறைய முத்தம் அளித்தும், நாட்டிற்கும் தமக்கும் உண்டாம் ஏதத்தைத் தம் மனைவிமார் அறியின் பெரிதும் வருந்துவ ராதலின், அதை அவர் அறியாவண்ணம் மறைத்தும் துன் புறுவர்,” என்று அவனைப் பாராட்டி அவன் போாண்மை தோன்றச் செய்தார் :