பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-கிழார்ப் பெயர்பெற்றோர்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவூர் கிழார் 101 உறையூரில் வாழ்ந்திருந்த கோஆர்கிழார், புகாரைத் தலைநகராகக்கொண்டு சோணுடாண்ட் கலங்கிள்ளியைக் காண எண்ணினர் ; கலங்கிள்ளியும் நல்லிசைப் புலவருள் ஒருவனவன். ஊக்கமுடையாரிடத்திலேயே உறுபொருள் சிற்றல்வேண்டும்; ஆற்றல் மிக்காரிடத்திலேயே ஆட்சி இருத்தல்வேண்டும் என்ற கருத்துக்கள் அமைய அவன் பாடிய பாக்களின் பெருமையினேப் பாராட்டாதார் ஒரு வரும் இலர் ; கலங்கிள்ளி, நல்லொழுக்கமுடைய நல்லோ வைன்; இவ்வாறு குணங்களால் கிறைந்தமையோடு நாடாள்திறமும் நன்கு வாய்க்கப்பெற்றவன்; அதற்காம் பெரும்படையும் அவன்பால் இருந்தது; இவ்வாறு எல்லா வகையானும் சிறந்தோணுகிய அவன் உறவு வேண்டினர் கோவூர்கிழார் ; உறந்தை நீங்கி புகாருட் புகுந்தார்; அரச லும், புலவரைப் போற்றி அழைத்துப் பொன்னும் பொருளும் அளித்தான்; அவன் அளித்த பொருள்கள் தம் வாழ்நாளிற்கு மேலும் வரும் பெரும்பொருளாதல் அறிந்த கோஆர்கிழார், “ இனி, நான், பொருள் வேண்டிப் பிறரைப் பாடேன் :

  • நலங்கிள்ளி நசைப் பொருநாேம் பிறர்பாடிப் பெறல் வேண்டேம்; அவற்பாடுதும் அவன்தாள் வாழியளன.’ (புறம்: -அ.உ)

எனப் பாடிப் பாராட்டியதோடு, வள்ளியோர்த் தேடி வருவார்க்கும், நலங்கிள்ளி, பிறரிடம் சென்று பின்னரும் இரக்காவண்ணம் பெரும்பொருள் தரும் அருங்கொடை உடையான்; அவனேச் சென்று பாடுக - பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே' என்று கூறி அவன் வண்மைக் குணத்திணை வாயார வாழ்த்தினர். நலங்கிள்ளியின் வண்மைதோன்ற வாழ்த்திய புலவர், அவன் வெற்றிச்சிறப்பினையும் விளங்க உரைத்துளார் ; அவன் போர்வேட்கையும் அவ்வேட்கை தணிவிக்கும் அவன் படைச்சிறப்பும், அப்படை கண்டு அஞ்சும் பகை யாசர்களின் அவலநிலையும் ஒருங்கு தோன்ற உயர்த்திக்